'மிரள்'  படத்தை மலேசியாவில்  வெளியிடும் பிரபல நிறுவனம். 

  • IndiaGlitz, [Thursday,November 10 2022]

Axess Film Factory G டில்லி பாபு தயாரிப்பில், M சக்திவேல் இயக்கத்தில் பரத்-வாணி போஜன் நடித்துள்ள திரைப்படம் “மிரள்”. புதுமையான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது.

இந்த படத்தின் வெளி நாட்டு உரிமத்தை வாங்கியுள்ள பிரபல நிறுவனமான அம்மா புரொடக்சன்ஸ் SDN bhd நிறுவனம் மலேசியா சிங்கப்பூர் நாடுகளில் வெளியிடுகிறது.

இந்த படத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெருகிறது இந்த நிகழ்வில் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் கலந்துகொள்கிறார்கள்.

நவம்பர் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ‘மிரள்’ படத்தில் பரத், வாணிபோஜன், கே.எஸ்.ரவிகுமார், மீராகிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி உள்பட பலர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தை சக்திவேல் என்பவர் இயக்கியுள்ளார். பிரசாத் இசையில் சுரேஷ் பாலா ஒளிப்பதிவில் கலைவாணன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.