கடைசி தடையும் நீங்கியது: மெர்சல் கொண்டாட்டம் ஆரம்பம்

  • IndiaGlitz, [Monday,October 16 2017]

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் டைட்டில் பிரச்சனை, கேளிக்கை வரி பிரச்சனை ஆகியவற்றை கடந்து வந்த நிலையில் கடைசியாக விலங்குகள் நல வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் பிரச்சனையையும் சந்தித்தது

இந்த பிரச்சனையும் இன்றுக்குள் சுமூகமாக தீர்ந்துவிடும் என்று தயாரிப்பு தரப்பும் விஜய் ரசிகர்களும் காத்திருந்த நிலையில் தீபாவளி இனிப்பு செய்தியாக சற்றுமுன்னர் மெர்சல் திரைப்படத்திற்கு விலங்குகள் நலவாரியம் தடையில்லா சான்று வழங்கியது. இதனையடுத்து கடைசி தடையும் நீங்கிவிட்டதால் விஜய் ரசிகர்கள் தீபாவளி மெர்சல் கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டனர்.

மேலும் இன்னும் சில நிமிடங்களில் தமிழகத்தின் அனனத்து திரையரங்குகளிலும் முன்பதிவு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல தடைகளை கடந்து ரசிகர்கள் முன் நாளை மறுநாள் திரைக்கு வரவுள்ள 'மெர்சல்' படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

More News

'மெர்சல்' பிரச்சனை: டெல்லியில் இருந்து அவசரமாக வருகை தரும் சிறப்பு அதிகாரி

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்திற்கு விலங்குகள் நல வாரியம் இன்னும் தடையில்லா சான்றிதழ் வழங்காததால் விஜய் ரசிகர்களுக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் டென்ஷன் அதிகமாகி கொண்டே வருகிறது.

இளைஞர்களின் ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத்

இசைஞானிக்கு ஒரு 'அன்னக்கிளி', ஆஸ்கார் நாயகருக்கு ஒரு 'ரோஜா', அதுபோல் ராக்ஸ்டார் அனிருத்துக்கு ஒரு '3'.

மெர்சல்' படத்தின் கதை கசிந்தது எப்படி?

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் கதை குறித்து ஏற்கனவே ஒரு வதந்தி இணையதளங்களில் வெளியானது.

ஆயுதபூஜை படங்களில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த 'ஹரஹர மகாதேவகி'

கடந்த மாதம் ஆயுதபூஜை தினத்தில் பெரிய பட்ஜெட் படமான ஏ.ஆர்.முருகதாஸின் 'ஸ்பைடர்' மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் 'கருப்பன்' படத்துடன் சின்ன பட்ஜெட் படமான 'ஹரஹர மகாதேவகி' படமும் ரிலீஸ் ஆனது.

விஜய்சேதுபதியின் 'கருப்பன்' படத்தின் கடைசிகட்ட வசூல் நிலை என்ன?

விஜய்சேதுபதியின் 'கருப்பன்' படத்தின் கடைசிகட்ட வசூல் நிலை என்ன?இந்த நிலையில் கருப்பன் திரைப்படம் சென்னையில் கடந்த செப்.29 முதல் நேற்று வரை ரூ.2,36,81,655 வசூல் செய்துள்ளது.