close
Choose your channels

'அவ்வை சண்முகி' படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமா இவர்? பிகினி உடையில் தாராள கிளாமர்!

Wednesday, December 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன், மீனா நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான ’அவ்வை சண்முகி’ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் அன் அலெக்ஸியா தற்போது இளம் கன்னியாக கிளாமர் உடையில் கலக்கி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான ’அவ்வை சண்முகி’ திரைப்படத்தில் கமல்ஹாசன் பெண் வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார் என்பதும், இந்த படத்தில் கமல், மீனா தம்பதிகளின் மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் அன் அலெக்ஸியா என்பவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன் அலெக்ஸியா ‘அவ்வை சண்முகி’ மட்டுமின்றி அர்ஜுன் நடித்த ’தாயின் மணிக்கொடி’ படத்திலும் அதன்பிறகு ஹிந்தியில் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி மாடலிங் துறையிலும் பிஸியாக வலம் வந்தார் என்பதும், அவர் தற்போது சென்னையில் நிறுவனம் ஒன்றை டத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அன் அலெக்ஸியா தற்போது இளம் கன்னியாக மாறி கிளாமரில் கலக்கிய வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இவருடைய சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பிகினி உடை உள்பட பல கிளாமர் புகைப்படங்களை பார்த்து ’அவ்வை சண்முகி’ குழந்தை நட்சத்திரமா இவர்? என்று ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment