ரஜினிகாந்த் - ஏவிஎம் சரவணன் திடீர் சந்திப்பு: 'சிவாஜி 2' உருவாகிறதா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை ஏவிஎம் சரவணன் தனது குடும்பத்தினருடன் சென்று பார்த்ததை அடுத்து ‘சிவாஜி 2’ உருவாகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான ’சிவாஜி’ திரைப்படம் நேற்றுடன் 15 ஆண்டுகளை நிறைவு செய்தது. இதனை அடுத்து படக்குழுவினர் இதனை கொண்டாடி வருகின்றனர் என்பதும் நேற்று தனது மகளுடன் இயக்குனர் ஷங்கர், சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்து தனது வாழ்த்தினை தெரிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் ஏவிஎம் நிறுவனத்தின் எம் சரவணன், எம்எஸ் குஹன், மற்றும் அருணா குகன் ஆகியோர் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது சிவாஜி படம் குறித்து தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் சந்திப்பை அடுத்து ’சிவாஜி 2’ படத்தையும் ஏவிஎம் நிறுவனம் தயாரிக்க வேண்டும் என்றும் ஷங்கர் இயக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களின் விருப்பம் நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
On the occasion of #SivajiTheBoss turning 15, #MSaravanan, #MSGuhan & @arunaguhan_ of @avmproductions met #SuperstarRajinikanth this morning. Earlier director @shankarshanmugh and his daughter @AditiShankarofl
— RIAZ K AHMED (@RIAZtheboss) June 17, 2022
met #Superstar at his residence #AVMProductions #15yearsofSivaji pic.twitter.com/osuQ0YkEut
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com