கமல் பாட்டையெல்லாம் யாரும் உட்கார்ந்து பார்க்க மாட்டாங்க.. இயக்குனர் சொன்னதை மறுத்த ஏவிஎம்..!
- IndiaGlitz, [Saturday,June 15 2024]
கமல் பாட்டையெல்லாம் யாரும் 4 நிமிடம் உட்கார்ந்து பார்க்க மாட்டார்கள், அதனால் தான் அந்த பாட்டை ஒரு நிமிடமாக குறைத்தேன் என்றும் இயக்குனர் கூறியதை தயாரிப்பாளர் ஏவி மெய்யப்பன் ஏற்கவில்லை என்று ஏவிஎம் குமரன் அவர்கள் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
பிரபல தெலுங்கு இயக்குனர் டி பிரகாஷ்ராவ் இயக்கத்தில் ’களத்தூர் கண்ணம்மா’ படம் உருவாகியபோது அந்த படத்தில் அறிமுகமான குழந்தை நட்சத்திரம் கமல்ஹாசனுக்கு ’அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ என்ற பாடல் இருந்தது. அந்த பாடல் நான்கு நிமிடம் இருந்த நிலையில் அதை இயக்குனர் டி பிரகாஷ் ராவ் ஒரு நிமிடமாக குறைத்து விட்டார்.
ஏன் குறைத்தீர்கள் என்று எனது அப்பா ஏவி மெய்யப்பன் கேட்டபோது ஒரு சின்ன பையன் பாடும் பாட்டை எல்லாம் யாரும் 4 நிமிடங்கள் உட்கார்ந்து பார்க்க மாட்டார்கள், எழுந்து வெளியே போய்விடுவார்கள், எனவே தான் அதை ஒரு நிமிடமாக குறைத்தேன் என்று இயக்குனர் கூறினார்.
ஆனால் எனது அப்பா ஏவி மெய்யப்பன் அதை மறுத்து, ‘கண்டிப்பாக இந்த பாடல் ஹிட் ஆகும், நான்கு நிமிடங்கள் உட்கார்ந்து பார்ப்பார்கள், அந்த முழு பாட்டும் எனக்கு வேண்டும் என்று சொல்லியதாகவும் இதனால் அதிருப்தி அடைந்த இயக்குனர் டி பிரகாஷ்ராஜ் அந்த படத்தை விட்டு விலகியதாகவும், அதன்பின் அந்த படத்தில் பீம்சிங் இணைந்ததாகவும் ஏவிஎம் குமரன் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஏவிஎம் நிறுவனத்திற்காக நடித்த முதல் திரைப்படமான ’முரட்டுக்காளை’ படம் குறித்தும் அந்த படம் உருவான விதம் குறித்தும் அவர் விரிவாக பேட்டியில் கூறியுள்ளார். இந்த பேட்டியின் முழு வீடியோ இதோ: