திரைக்கு வரும் முன்பே HD பிரிண்ட்: மிரட்டும் 'தமிழ் ராக்கர்ஸ்' டிரைலர்
Send us your feedback to audioarticles@vaarta.com
திரைக்கு வரும் பத்து நாட்களுக்கு முன்னரே HD பிரிண்ட்டில் படம் வெளியாகும் என்று சவால் விடும் கதையம்சம் கொண்ட ‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப்தொடரின் டிரைலர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம் தயாரிப்பில் அருண் விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப்தொடர் ’தமிழ் ராக்கர்ஸ்’. சோனி லைவ் ஓடிடியில் வரும் 19ஆம் தேதி இந்த வெப்தொடர் வெளியாக உள்ளது
இந்த தொடரின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சற்று முன் இந்தத் தொடரின் டிரைலர்வெளியாகியுள்ளது. இரண்டு நிமிடங்களுக்கு மேல் இருக்கும் இந்த டிரெய்லரில் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் பிரபல நடிகரின் திரைப்படம் 10 நாட்களுக்கு முன்பே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்படுகிறது
இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் கண்ணீர் விட்டு கதறும் நிலையில் இந்த கூட்டத்தை கண்டு பிடிக்க காவல் அதிகாரி அருண்விஜய் களமிறங்குகிறார். இதில் அவருக்கு வெற்றி கிடைத்ததா? தமிழ்ராக்கர்ஸ் யார் என்பது கண்டுபிடித்தாரா? என்பதுதான் இந்த வெப்தொடரின் கதை
அருண்விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த வெப்தொடருக்கு விகாஸ் பாதிஷா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Here it’s the Trailer of #TamilRockerz starring @arunvijayno1 produced by @avmproductions @arunaguhan_ releasing on @SonyLIV Aug 19th @vanibhojanoffl @Ishmenon @thaen_tharunsk @DopRajasekarB @EditorSabu @vikasbadisa @ManojKumarKalai @Synccinema @silvastunt pic.twitter.com/PQGfBjqkin
— Arivazhagan (@dirarivazhagan) July 16, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments