அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்தின் அசத்தலான முதல் நாள் வசூல்

  • IndiaGlitz, [Saturday,April 28 2018]

மார்வல் சூப்பர் ஹீரோக்கள் திரைப்பிரவேசத்தின் பத்தாவது ஆண்டுக் கொண்டாட்டமாக நேற்று உலகம் வெளியாகியுள்ள அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ என்ற ஹாலிவுட் திரைப்படம் தமிழகம் உள்பட இந்தியா முழுவதிலும் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு முதல் நாளிலேயே இந்தியா முழுவதும் அபாரமான வரவேற்பு கிடைத்துள்ளது என்பது இந்த படத்தின் முதல் நாள் இந்திய வசூலில் இருந்து தெரிய வந்துள்ளது.

இந்த படம் இந்தியாவில் முதல் நாளில் ரூ.40.13 கோடி வசூல் செய்துள்ளது. ஹாலிவுட் படம் ஒன்று இந்தியாவில் வசூல் செய்யும் அதிகபட்ச தொகை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை வெளியான படங்களில் ஒரு ஹீரோ ஒரு வில்லன் அல்லது ஒரு ஹீரோ பல வில்லன் போன்ற படங்களைத்தான் பார்த்திருக்கின்றோம். ஆனால் இந்த படத்தில் முதல்முறையாக ஒரு வில்லன், 22 சூப்பர் ஹீரோக்கள் கொண்ட படமாக இந்த அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் திரைப்படம் உள்ளது. ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ள இந்த படத்தின் அடுத்த பாகம் அடுத்த ஆண்டு வெளிவரவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஐபிஎல் 2018: தல தோனிக்கு மட்டுமே கிடைத்த மிகப்பெரிய பெருமை

ஐபிஎல் போட்டிகள் என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழா என்றால் அது மிகையாகாது. கடந்த 11 ஆண்டுகளாக இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

150 நாட் அவுட்: தல தோனிக்காக காத்திருக்கும் புதிய சாதனை

நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கி தூள் கிளப்பி வருகிறது.

அடல்ட் ஹாரர் காமெடி படத்தை பொழுதுபோக்கு படமாக பார்க்கவேண்டும்: இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார்

'ஹர ஹர மகாதேவகி' என்ற அடல்ட் காமெடி படத்தை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார், அதே பாணியில் மீண்டும் இயக்கியுள்ள திரைப்படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து.

ரஜினி நல்லவர் என்றால் 8 கோடி தமிழர்கள் யார்? சீமான்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று போராடும் பெரும்பாலான கட்சிகள் போராட்டத்தின் உண்மையான நோக்கத்தை விட்டுவிட்டு ரஜினியை எதிர்ப்பதிலும் விமர்சனம் செய்வதிலும்

மெரீனாவில் போராட்டம்: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சென்னை மெரீனாவில் நடத்திய பிரமாண்டமான ஜல்லிக்கட்டு போராட்டம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது.