'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்': சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்

சூப்பர் ஹீரோக்களின் சாகசங்கள் குறித்த படங்களான அவெஞ்சர்ஸ் வரிசையில் அவெஞ்சர்ஸ், ’ஏஜ் ஆஃப் அல்ட்ரான்’,  ’சிவில் வார்’, 'அவெஞ்சர்ஸ் ’இன்ஃபினிட்டி வார்’ போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது வெளியாகவிருக்கும் அடுத்த படம் 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்'.

இந்த படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வரும் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படத்திற்கு இந்திய சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படம் 181 நிமிடங்கள் அதாவது 3 மணி நேரம் ஒரு நிமிடம் ரன்னிங் டைம் கொண்டதாக உள்ளது. பொதுவாக ஆங்கில படங்கள் அதிகபட்சமாக ஒன்றரை மணி நேரமே இருக்கும். ஆனால் இந்த படம் இருமடங்கு ரன்னிங் டைமை கொண்டுள்ளது. இருப்பினும் அனைத்து தரப்பினர்களும் விரும்பும் சூப்பர் ஹிரோ படம் என்பதால் அதிக ரன்னிங் டைம் ஒரு குறையாக இருக்காது என்றே கருதப்படுகிறது.
 

More News

இப்படியெல்லாம் செய்யாதீங்க: ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸ் அறிவுரை

ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான 'காஞ்சனா 3' திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும்

'சூர்யா 39' படம் குறித்த முக்கிய அறிவிப்பு

சூர்யா நடித்து முடித்துள்ள 36வது திரைப்படமான 'என்.ஜி.கே' திரைப்படம் வரும் மே 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.

நடிகர் மோகன்லாலில் அடுத்த புதிய அவதாரம்

இந்திய சினிமாவில் முக்கிய நடிகர்களின் பட்டியலில் உள்ள மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'லூசிஃபயர்' மிகப்பெரிய வெற்றி பெற்றது.

ஷங்கரின் 25வது வருடம்: பாராட்டிய பிரபல இயக்குனர்கள்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கடந்த 1993ஆம் ஆண்டு 'ஜெண்டில்மேன்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

என்ன ஒரு ஃபினிஷிங்: தல தோனிக்கு குவியும் பாராட்டுக்கள்

தோல்வி அடைந்த ஒரு அணியின் கேப்டனை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடுவது அனேகமாக உலகில் இதுதான் முதல்முறையாக இருக்கும்.