'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்': சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்
- IndiaGlitz, [Monday,April 22 2019]
சூப்பர் ஹீரோக்களின் சாகசங்கள் குறித்த படங்களான அவெஞ்சர்ஸ் வரிசையில் அவெஞ்சர்ஸ், ’ஏஜ் ஆஃப் அல்ட்ரான்’, ’சிவில் வார்’, 'அவெஞ்சர்ஸ் ’இன்ஃபினிட்டி வார்’ போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது வெளியாகவிருக்கும் அடுத்த படம் 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்'.
இந்த படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வரும் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த படத்திற்கு இந்திய சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படம் 181 நிமிடங்கள் அதாவது 3 மணி நேரம் ஒரு நிமிடம் ரன்னிங் டைம் கொண்டதாக உள்ளது. பொதுவாக ஆங்கில படங்கள் அதிகபட்சமாக ஒன்றரை மணி நேரமே இருக்கும். ஆனால் இந்த படம் இருமடங்கு ரன்னிங் டைமை கொண்டுள்ளது. இருப்பினும் அனைத்து தரப்பினர்களும் விரும்பும் சூப்பர் ஹிரோ படம் என்பதால் அதிக ரன்னிங் டைம் ஒரு குறையாக இருக்காது என்றே கருதப்படுகிறது.