அவெஞ்சர்ஸ் இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல தமிழ் ஹீரோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஹாலிவுட்டில் வெளியான அவெஞ்சர்ஸ் திரைப்படங்கள் உலகப்புகழ் பெற்றவை என்பதும் அந்த படங்கள் வசூலித்த வசூல் தொகையானது உலகம் முழுவதும் ஆச்சரியப்பட வைத்தது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் அவெஞ்சர் இயக்குனரின் அடுத்த படத்தில் தமிழ் ஹீரோ நடிக்க உள்ளதாக வெளிவந்த தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. அவெஞ்சர்ஸ் இயக்குனர் இயக்க இருக்கும் ’தி க்ரே மேன்’ என்ற திரைப்படம் நெட்பிளிக்ஸ்காக உருவாக்கப்பட உள்ளது என்றும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் 4 நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த நான்கில் ஒருவர் பிரபல தமிழ் ஹீரோ தனுஷ் என்பது தகுறிப்பிடத்தக்கது
தனுஷ், கிரிஸ் எவன்ஸ், ரியான் கோஸ்லிங் மற்றும் அன டே ஆர்மஸ் ஆகிய நால்வரும் இந்த படத்தில் நடிக்க உள்ளனர் என்பதும் இந்த படம் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஹாலிவுட்டில் The Extraordinary Journey of the Fakir என்ற திரைப்படத்தில் தனுஷ் நடித்து இருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்க உள்ளது தமிழ் திரை உலகிற்கு பெருமைக்குரியதாக கருதப்படுகிறது. இதனை அடுத்து தனுஷ்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
THE GRAY MAN cast just got even better.
— NetflixFilm (@NetflixFilm) December 17, 2020
Jessica Henwick, Wagner Moura, Dhanush, and Julia Butters will join Ryan Gosling, Chris Evans, and Ana de Armas in the upcoming action thriller from directors Anthony and Joe Russo. pic.twitter.com/SJcz8erjGm
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments