10 நாட்களில் அவெஞ்சர் தந்த ஆச்சரிய வசூல்

  • IndiaGlitz, [Monday,May 07 2018]

சமீபத்தில் வெளியான 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்' திரைப்படம் உலகம் முழுவதும் சாதனை வசூல் புரிந்து வரும் நிலையில் இந்த படம் இந்தியாவில் மட்டும் ரூ.250 கோடி வசூல் செய்துள்ளதாகவும், தமிழகத்தில் மட்டும் ரூ.26 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த பத்து நாட்களில் இந்த படம் ரூ.26.35 கோடி வசூல் செய்துள்ளது. குறிப்பாக சென்னையில் ரூ.5.96 கோடியும், செங்கல்பட்டில் ரூ.11 கோடியும், கோவையில் ரூ.6.2 கோடியும் இந்த படம் வசூலித்துள்ளது. 

தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த படம் 10 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.250 கோடி வசூல் செய்து ஆச்சரியம் அளித்துள்ளது. மேலும் உலக அளவில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக இந்த படம் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சசிகுமார் படத்திற்காக மதுரையில் போடப்பட்ட பிரமாண்டமான அரங்குகள்

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றிப்படம் 'நாடோடிகள்' இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'நாடோடிகள் 2' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன

சினிமாவுக்கு வந்துவிட்டார் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் 

தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஐஏஎஸ் அதிகாரி சகாயம். ஊழலை எதிர்க்கும் நேர்மையான, தைரியமான அதிகாரிகளில் மிகச்சிலரில் இவரும் ஒருவர்.

வேறு வழியில்லை, இனிமேல் சட்ட நடவடிக்கைதான்: நிவேதா பேத்ராஜ்

கடந்த சில நாட்களாக ஒருசில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் நடிகை நிவேதா பேத்ராஜ் என கூறப்பட்ட ஒரு பிகினி புகைப்படம் வைரலாகியது.

இருட்டு அறையில் முரட்டு குத்து: மூன்றே நாளில் இத்தனை கோடி வசூலா? 

கவுதம் கார்த்திக்,  யாஷிகா ஆனந்த், வைபவி நடித்த 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படம் கடந்த மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் ஒரு கோடிக்கும் மேல் வசூல் செய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

ரிபப்ளிக் டிவி அர்னாப் மீது எப்.ஐ.ஆர்! ஏன் தெரியுமா?

ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஊடகங்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.