'அவதார் 2' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,November 25 2016]

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய 'அவதார்' திரைப்படம் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மெகா ஹிட் ஆகியது. சுமார் $237 மில்லியன் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் $2,788 பில்லியன் வசூல் செய்தது.
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. தற்போது 'அவதார் 2' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
'அவதார் 2' படம் வரும் 2018ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறை தினத்தில் அதாவது டிசம்பர் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் நடித்த Sam Worthington, Zoe Saldana, Sigourney Weaver உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஜேம்ஸ் கேமரூன் பிரமாண்டமாக இயக்கி வருகிறார்.
மேலும் இந்த படத்தின் 3வது, 4வது, 5வது பாகங்கள் வரும் 2020, 2022 மற்றும் 2023ல் வெளியிட ஜேம்ஸ் கேமரூன் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.