அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறிப்பாயும் காளைகளை அடக்கும் காளையர்கள்!
- IndiaGlitz, [Thursday,January 14 2021]
தமிழர்களின் திருவிழாவான பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு போட்டி நடப்பது என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக மதுரையில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூர் மற்றும் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் கெடுபிடி காரணமாக ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு தடுப்பு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டது என்பதும் அந்த அறிவிப்பின்படி அந்த வழிகாட்டுதலின்படி ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் சற்று முன்னர் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. கொரோனா விதிமுறைகளுடன் நடைபெற்று வரும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை சீறிப் பாய்ந்து வரும் காளைகளை அடக்கி வருகின்றனர்.
காளைகளை அடக்கிய காளையர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 788 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதும் அதேபோல் காளைகளை பிடிக்க 430 காளையர்கள் பதிவு செய்யப்பட்டு களம் கண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது