இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா? முழுமையான தகவல்!

  • IndiaGlitz, [Monday,January 10 2022]

 

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுள் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனா பாதிப்பின் காரணமாகப் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்குத் தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

அதன்படி 300 மாடுபிடி வீரர்களைக் கொண்டு போட்டிகள் நடத்தலாம்.

முன்னதாகப் போட்டிகளில் கலந்துகொள்ளும் காளைமாடுகள், வீரர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். தற்போது கொரோனாவை கருத்தில் கொண்டு காளைகள், வீரர்கள் என இருவருக்குமே 3 நாட்களுக்கு முன்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெறலாம்.

இந்த ஆன்லைன் விண்ணப்ப நடைமுறையானது இ-சேவா மையத்தில் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டு உள்ளது என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்து உள்ளார்.

மேலும் போட்டிக்கு வரும் காளையுடன் 1 உரிமையாளர் மற்றும் உதவியாளர் மட்டுமே வரவேண்டும். அந்த இரண்டு நபர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அதோடு 2 நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவர்களுக்கு நெகடிவ் ரிசல்ட் வந்திருக்க வேண்டும்.

வீரர்களுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்படும். மேலும் அடையாள அட்டை இல்லாத நபர்கள் போட்டி நடத்தப்படும் இடங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு என அனைத்துப் போட்டிகளிலும் வெறும் 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

மேலும் போட்டிகளில் கலந்துகொள்ளும் காளை மற்றும் வீரர்கள் அனைவரும் ஒரு போட்டியில் கலந்துகொண்ட பிறகு வேறு போட்டிகளில் கலந்துகொள்ளக்கூடாது.

ஒவ்வொரு போட்டியிலும் 700 காளைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இந்தப் போட்டிகளுக்கு உள்ளூர் பார்வையாளர்கள் யாரும் வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டுமாடுகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

மேலும் வீரர்களுக்கும் காளை உரிமையாளர்களுக்கும் மதிய நேர உணவு மற்றும் தற்காலிக கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியானது மாநராட்சி தலைவர் தலைமையில் நடைபெறும் என்றும் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு போட்டிகள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

More News

விவாகரத்துக்கு பின்னரும் வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகரின் முன்னாள் மனைவி!

விவாகரத்துக்கு பின்னரும் பிரபல நடிகரின் முன்னாள் மனைவி தனது முன்னாள் கணவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தகவல் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பிக்பாஸ் நிரூப் புதிய ஹேர்ஸ்டைல்: வைரல் புகைப்படம்!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான நிரூப் புதிய ஹேர்ஸ்டைல் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 

'இன்னொரு டீ சாப்பிடலாமா?: 'பேட்ட' படத்தின் மாஸ் டெலிட்டட் காட்சியை வெளியிட்ட படக்குழு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் ரிலீஸாகி இன்றுடன் மூன்று வருடங்கள் முடிவடைந்த நிலையில் இந்த படத்தில் டெலிட் செய்யப்பட்ட காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில்

திரையரங்குகள் மூடப்படும் என தகவல்: பொங்கல் ரிலீஸ் என்ன ஆகும்?

தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்படும் என செய்திகள் கசிந்துள்ள நிலையில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக திட்டமிடப்பட்டுள்ள திரைப்படங்களின் நிலை என்ன என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

சீரியஸ் ஆகும் சித்தார்த் சர்ச்சை டுவிட் விவகாரம்: வழக்குப்பதிவா?

நடிகை சித்தார்த் சர்ச்சைக்குரிய டுவிட் ஒன்றை பதிவு செய்ததை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்ய டிஜிபியிடம் தேசிய மகளிர் ஆணையம் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.