தமிழ் நடிகரை திருமணம் செய்து கொண்ட 'அவன் இவன்' மதுஷாலினி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலாவின் ’அவன் இவன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை மதுஷாலினி தமிழ் நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
’பழனியப்பா கல்லூரி’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பாலா இயக்கிய ’அவன் இவன்’ கமல்ஹாசனின் ’தூங்காவனம்’ உள்பட பல திரைப்படங்களில் மதுஷாலினி நடித்து இருந்தார். சமீபத்தில் வெளியான ஆர்கே சுரேஷின் ’விசித்திரன்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் கோகுல் ஆனந்த் என்பவரை மதுஷாலினி திருமணம் செய்து கொண்டார். ஹைதராபாத்தில் நடந்த இந்த திருமணத்திற்கு உறவினர்கள் நண்பர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தன்னுடைய திருமண வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது சமூக வலைத்தளத்தில் மதுஷாலினி நன்றியை தெரிவித்துள்ளார்.
’சென்னை டு சிங்கப்பூர்’ ’திட்டம் இரண்டு’ நடுவன்’ உள்ள பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் கோகுல் ஆனந்த், 'பஞ்சராக்ஷரம்’ என்ற படத்தில் நடித்தபோது மதுஷாலினியுடன் காதல் ஏற்பட்டது என்பதும் தற்போது இந்த காதல் திருமணத்தில் முடிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகை மதுஷாலினிக்கு திருமணம் நடந்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Thank you for all the love we’ve received. We look forward to the new chapter of our lives with hope and gratitude in our hearts.
— MADHU SHALINI (@iamMadhuShalini) June 17, 2022
Love MADHU SHALINI & GOKUL ♥️ pic.twitter.com/6YLREAZo8L
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments