கடந்த பல வருடங்களாக தமிழ் சினிமாவை ஆட்டி படைத்துக்கொண்டிருந்த காமடி பேய்களை விரட்டி அடித்து அடல்ட் காமெடி அந்த இடத்தை பிடித்துவிட்ட்து. இந்த நிலையில் ஒரு திகிலூட்டி பயமுறுத்தும் ஒரு அக்மார்க் பேய் படத்தை கொஞ்சம் ஏ நொடியோடு தர நினைத்து அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெறுகிறார்கள் தயாரிப்பாளர் துணை எழுத்தாளர் சித்தார்த் மற்றும் இயக்குனர் மிலிண்ட் ராவ்.
சித்தார்த் ஒரு நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் தன் மனைவி ஆண்ட்ரியாவுடன் இமய மலை அடிவாரத்தில் தனிமையான வீட்டில் வசித்துவருகிறார். காலியாக இருக்கும் பக்கத்துக்கு பங்களாவுக்கு அதுல் குல்கர்னி அவர் மனைவி டீனேஜ் மகள் மற்றும் ஒரு பெண் குழந்தை குடி வந்து இவர்களுடன் நட்பாகிறார்கள். ஜென்னிக்கும் அவள் தங்கைக்கும் வீட்டில் எதோ ஒரு அமானுஷ்ய சக்தியிடமிருந்து தொல்லை வருகிறது வீட்டை விட்டு போகும்படி சொல்கிறது. போதை பழக்கமுள்ள பெண் ஜென்னி சித்தார்த் மீது ஒரு ஈர்ப்பு கொண்டு தகாத முறையில் அணுகுகிறாள் அவன் அவளை கண்டிய்க்க பக்கத்தில் இருக்கும் ஒரு கிணற்றுக்குள் குதிக்கிறாள். காப்பாற்ற குதிக்கும் சித்தார்த்தும் கிணற்றுக்குள் எதோ ஒரு விஷயத்தை பார்த்து பயந்து பின் அவளை எப்படியோ காப்பாற்றுகிறார். அதன் பிறகு இரு குடும்பங்களும் பல பயங்கரமான நிகழ்வுகளை சந்திக்க அவை ஜென்னியின் மனா வியாதியால் நடக்கின்றனவா இல்லை எதோ ஒரு அதிபயங்கர சக்தி அவர்களை அழிக்க நினைக்கிறதா என்பதே மீதி கதை.
சித்தார்த் இந்த படத்தை தானே எழுதி தயாரித்து நடித்திருக்கிறார் அவருடைய முந்தைய தயாரிப்பான ஜில் ஜுங் ஜூக்கை போலவே இதுவும் ஒரு சிறந்த பரிச்சர்த்தமான முயற்சி. நடிப்பில் நல்ல துள்ளல் அதிலும் அந்திரேயாவின் உதட்டோடு உதடு வைத்து பல பல முறை முத்தம் கொடுப்பதிலாகட்டும் கட்டுரை காட்சிகள் ஆகட்டும் குஷியாகி ரசிகனையும் குஷி படுத்துகிறார். மற்ற கதாபாத்திரங்களுக்கு கதையில் முக்கியத்துவம் கொடுத்து அடக்கி வாசித்து கடைசி ட்விஸ்ட் வரும்போது அதி பயங்கர மேக்கப்புடன் மிரட்டவும் செய்கிறார். இப்போதெல்லாம் ஆண்ட்ரியாவுக்கு ஏற்ற நல்ல கதாபாத்திரங்கள் அமைகிறது அவரும் அதை அசால்டாக செய்து வெகுவாக கவர்கிறார். தன் கதாபாத்திரத்துக்காக தமிழ் சினிமாவின் எந்த ஒரு கதாநாயகியும் இது வரை தொடாத எல்லையை முத்தங்களிலும் படுக்கையறை காட்சிகளிலும் தொட்டு தாண்டி விடுகிறார். டீன் ஏஜ் பெண்ணாக வரும் அனிஷா விக்டர் அற்புதமான தேர்வு அந்த வயதுக்குரிய புரிதல் இன்மை மற்றும் நவ்வேன உலக எல்லை மீறல் அனைத்தையும் அப்படியே கண் முன் கொண்டு வருகிறார். பேயிடம் மாட்டி உடலை முறுக்கி வளைத்து தூக்கி எறியப்பட்டு நன்றாக உழைத்திருக்கிறார் சபாஷ். அவினாஷ் ரகுதேவன் பேயோட்டுபவராக வித்தியாசமான தோற்றத்துடன் வந்தாலும் கனமான கதாபாத்திரம் இல்லாததால் ஜில் ஜுங் ஜூக்கை போல இதில் பெரிதாக மனதில் இடம் பிடிக்க வில்லை. அதுல் குலகாரணி மற்றும் மனோதத்துவ டாக்டராக வரும் சுரேஷ் ஆகியோர் தேர்ந்த நடிப்பை அளிக்க இதர கதாபாத்திரங்களில் வரும் அனைவருமே கச்சிதம்.
அவளின் நிஜ கதாநாயகர்கள் ஒளிப்பதிவு மற்றும் சிறப்பு சப்தம் நிபுணர் விஷ்ணு கோவிந்த் மற்றும் அவர் குழு கதைக்கு ஏற்ற திகிலை சப்த ஜாலங்களிலேயே பாதி பயத்தை வரவழைத்து விடுகிறார்கள். இமய மலை அடிவாரத்துக்கே நம்மை கொண்டு சென்று தங்க தங்க வைத்தது போல ஒரு உணர்வை ஏற்படுத்தி இருக்கிறார்கள். முதலாம் பாகம் மிக அழகாக பல முடிச்சுகளை போட்டு அடுத்து என்ன நடக்குமோ என்ற ஆர்வத்தை கூட்டி விடுகிறது. மனோதத்துவ டாக்டர் சுரேஷ் ஜென்னியை பரிசோதிக்கும் பொழுது அவளுடைய மூல கதையையும் குணாதிசத்தையும் திரையில் தோன்றும் எழுத்துக்களிலும் அவள் உபயோகிக்கும் பொருட்களை கொண்டும் நமக்கு உணர்த்துவது போல அழகான ஆழமான காட்சிகள் ஆங்காங்கே வந்து போகின்றன. திரைக்கதையில் அதிகம் கவரும் ட்விஸ்ட் அந்த இரண்டு ஆவிகள் எதற்காக குடும்பத்தை துன்புறுத்துகின்றன என்பது.
மனதை உறுத்தும் விஷயங்கள் என்று பார்த்தல் முதல் பாதியில் எதோ ஒரு புத்திசாலித்தனமான கையாளுதல் திரைக்கதையில் இருக்க போகிறது என்று எண்ண வைத்து கடைசியில் அதேசூரிய கிரஹணம், நரபலி, பழி வாங்கும் ஆவி, பேய் ஓட்டுதல் மாய மந்திரம் என்று போவது ஏமாற்றம் அளிக்கிறது. பிளாஷ் பாக்கில் சொல்ல படும் சீன கதையும் காரணங்களும் மிக மொக்கையாகி அதுவரை வந்த திரைக்கதையின் சுவரசியத்தையே பதம் பார்க்கிறது. க்ராபிக்ஸ்சும் ப்ரோஸ்த்தெடிக் மேக்கப்பும் பெரிதும் எடுபடவில்லை. தமிழ் வசன உச்சரிப்பு எல்லா இடத்திலும் சரியாக இருந்தும் கதையும் களமும் சற்று அந்நிய பட்டே காணப்படுகிறது ஆனாலும் கான்ஜுரிங் போன்ற ஹாலிவுட் டப்பிங் படத்துக்கே ஆதரவு கொடுக்கும் ரசிகனுக்கு இது ஒரு பெரிய பிரச்சினையாக தோன்ற வாய்ப்பில்லை. ஒரு பெண் உயிரை கொன்றுதான் ஒரு ஆணை பெற்று எடுக்க வேண்டும் என்றால் அந்த ஆணே தேவையில்லை என்ற மெசேஜ் படத்துக்கு ஒட்டாமல் இருந்தாலும்ம் இன்றைய சமூகத்துக்கு மிக முக்கியமான ஒன்றே.
திகில் மற்றும் பேய் பட விரும்பிகள் தாராளமாக அவள் படத்திற்கு ஒரு விசிட் அடிக்கலாம்
Comments