அவள், விழித்திரு படங்களின் ஓப்பனிங் வசூல் எப்படி?

  • IndiaGlitz, [Monday,November 06 2017]

கடந்த வாரம் சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களில் கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில் சித்தார்த்தின் 'அவள்' மற்றும் தன்ஷிகாவின் 'விழித்திரு' திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின. இரண்டு படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு இருந்ததால் கனமழையிலும் திருப்தியான ஓப்பனிங் வசூல் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தார்த்தின் 'அவள்' சென்னையில் 15 திரையரங்குகளில் 171 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.57,44,788 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 85% பார்வையாளர்கள் இருந்ததால் விநியோகிஸ்தர்களுக்கு திருப்தியான வசூல் கிடைத்ததாக கருதப்படுகிறது.

அதேபோல் விதார்த், தன்ஷிகா நடித்த 'விழித்திரு' திரைப்படம் சென்னையில் கடந்த வாரயிறுதி நாட்களில் 11 திரையரங்குகளில் 93 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.14,28,753 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 70% வரை பார்வையாளர்கள் இருந்ததால் சராசரி ஓப்பனிங் வசூலை இந்த படம் பெற்றுள்ளது.