அருண்விஜய்யின் அடுத்த படத்தின் இரண்டு அப்டேட்கள்: வீடியோ வைரல்

  • IndiaGlitz, [Tuesday,April 13 2021]

நடிகர் அருண் விஜய் தற்போது ’அக்னி சிறகுகள்’, ’பாக்ஸர்’, ‘சினம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அது தவிர இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்திலும், ஹரியின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதி கட்டத்திற்கு வந்து விட்டதை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளை தற்போது படக்குழுவினர் தொடங்கியுள்ளனர்

இந்த படத்தின் டைட்டில் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏப்ரல் 15ஆம் தேதி வெளியாகும் என்றும் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் என்பதும் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிஎஸ் சாம் இசையில், ராஜசேகர் ஒளிப்பதிவில் சாபு ஜோசப் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் பகவதி பெருமாள் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. அதிரடி ஆக்சன் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தை ஆல் இன் ஆல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.