பெண் காவலரை அசிங்கமாக பேசிய ட்ரைவர்....! கேஸ் போட்டு தூக்கிய போலீஸ்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
பெண் எஸ்-ஐ கிருத்திகாவை தகாத வார்த்தைகளால் பேசிய ஆட்டோ ட்ரைவர் மீது, 5 வழக்குகள் போடப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் நன்மை கருதி, காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை பாரிஸ் கார்னரில், காவல் அதிகாரிகள் வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை மறித்தனர். அதில் வந்த அக்சர் அலி என்ற ஆட்டோ ட்ரைவரை விசாரித்ததில், அவர் மாற்றுத்திறனாளி என்றும், மருத்துவக் காரணங்களுக்காக வெளியில் செல்வதாகவும் கூறியிருந்தார். ஆனால் போலியான இ-பதிவு முறையை வைத்து, ஆட்டோவில் நபர்களை ஏற்றி வந்தது காவல் துறையினருக்கு தெரிய வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கிருத்திகா, ஆட்டோ ட்ரைவர் மீது வழக்குப்பதிவு செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தார்.
அதற்கு அக்சர் அலி என் ஆட்டோவை எப்படி பறிமுதல் செய்யலாம்.என் ஆட்டோ சாவியை குடு.. ஒரு பொண்ணு நீயே இப்படி பேசுறியா? நீ நாசமா போய்டுவ.. என்று தகாத வார்த்தைகளால் வசை பாடியுள்ளான். இதன் பின்
இரு ஒரு நிமிஷம்" என்று கூறி செல்போனை எடுத்து யாருக்கோ போன் செய்துள்ளார். நான் 40 வருஷமா இந்த ஏரியாவில் இருக்கேன், நான் யார்னு தெரியுமா..? சேகர்பாபு கிட்ட பேசிறியா..? இல்ல அவர இங்க கூட்டிட்டு வரட்டுமா..? என்று அசிங்கமாக பேசியுள்ளார். ஆனால் கிருத்திகா நான் என் கடமையைத்தான் செய்தான் என்று கூறி விளக்கமளித்துள்ளார். ஆட்டோ ட்ரைவர் பிரச்சனையை தொடர்ந்ததால், காவல் அதிகாரி கிருத்திகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆட்டோ சாவியை அக்சர் பிடித்து இழுத்ததில் பெண் அதிகாரிக்கு கையில் காயம் ஏற்பட்டதாகவும், ஊரடங்கு தளர்வுகளை தவறாக பயன்படுத்தியதாகவும் அவர் புகாரில் தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து பெண் காவலரை தவறாக பேசிய அக்பர் அலி மீது, மீது கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உட்பட 5 பிரிவுகளின் கழ்
காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆட்டோ ட்ரைவர் பெண் எஸ்.ஐ-யை தரக்குறைவாக பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இணையவாசிகள் பலரும் அக்பருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments