ஆட்டோ டிரைவருக்கு லாட்டரியில் கோடிக்கணக்கான பம்பர் பரிசு!
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரள அரசின் ஓணம் பண்டிகைக்கான பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் நேற்றுமுன்தினம் திருவனந்தப்புரத்தில் நடைபெற்று இருக்கிறது. இந்தக் குலுக்களில் ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு ரூ.12 கோடி பரிசுத் தொகை விழுந்து இருப்பது அம்மாநிலத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பணித்துராவை சேர்ந்த ஜெயபாலன் எனும் ஆட்டோ டிரைவருக்கு ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ.12 கோடி பரிசுத்தொகை விழுந்துள்ளது. அம்மாநிலத்தின் நிதித்துறை அமைச்சர் கே.என். பாலகோபால் கலந்து கொண்டு குலுக்கலை அறிவித்த நிலையில் ஆட்டோ டிரைவர் ஜெயபாலனுக்கு இந்தப் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதையடுத்து ஏஜெண்ட் தொகை மற்றும் வரி நீங்கலாக ஜெயபாலனுக்கு ரூ.7.39 கோடி ரூபாய் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற மற்றொரு லாட்டரி குலுக்கலில் வயநாட்டைச் சேர்ந்த சைதல்வி(45) என்பவருக்கு ரூ.12 கோடி பரிசுத்தொகை கிடைத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
துபாயில் உள்ள உணவகம் ஒன்றில் உதவியாளராக வேலைப்பார்த்து வரும் சைதல்வி கடந்த சில தினங்களுக்கு முன்பு கூகுள் பே மூலம் நண்பர் ஒருவருக்கு பணம் செலுத்தி இந்த லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். இந்நிலையில் சைதல்விக்கு ஏஜெண்ட் மற்றும் வரி நீங்கலாக 7.56 கோடி ரூபாய் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments