கார் எரிந்து மூவர் பலியான சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பம்! குடும்பத்துடன் தற்கொலையா?

  • IndiaGlitz, [Wednesday,May 31 2017]

கடந்த 27ஆம் தேதி சென்னையை சேர்ந்த ஜெயதேவன் என்ற ஆடிட்டரின் குடும்பத்தினர் சென்ற கார் மாமல்லபுரம் அருகே சென்றபோது திடீரென தீப்பிடித்து எரிந்து காரில் இருந்த ஆடிட்டர் ஜெயதேவன், அவருடைய மனைவி ரமாதேவி மற்றும் மகள் திவ்யஸ்ரீ ஆகிய மூவரும் பலியாகினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் இது விபத்தா? அல்லது கொலையா? என்ற ரீதியில் விசாரணை செய்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குடும்பத்தோடு செய்த தற்கொலையாக இருக்குமோ என்ற சந்தேகம் தற்போது போலிசாருக்கு எழுந்துள்ளது. ஜெயதேவனின் மகள் திவ்யஸ்ரீக்கும் ராணுவ வீரர் சரத் என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. ஆனால் திடீரென இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் திவ்யஸ்ரீ, தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெயதேவன் குடும்பத்தினர் குடும்பத்தோடு தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.

மேலும் திவ்யஸ்ரீயின் கணவர் சரத்தை போலீசார் விசாரணை செய்தபோது அவர் திடுக்கிடும் பல தகவல்களை கூறியதாகவும், அதன் பின்னரே போலீசார் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஜெயதேவன் உறவினர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிந்து விழுந்தது. தி.நகரில் பெரும் பரபரப்பு

இன்று அதிகாலை முதல் சென்னை தி.நகர் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் தீ கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் நிலையில்...

தீயை அணைக்கும் செலவை சென்னை சில்க்ஸ் நிர்வாகத்திடம் வசூலிக்கப்படும். அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை தி.நகர் சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது...

தமிழகத்தை ஆளும் தகுதி தமிழனுக்கு மட்டுமே உண்டு. ரஜினிக்கு பாரதிராஜா மறைமுக எச்சரிக்கை

சமீபத்தில் மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி சென்னை மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினார்...

சினிமாத்தனம் இல்லாத போலீஸ் கேரக்டரில் பிரபல இயக்குனர்

அறிமுக இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கி வரும் 'களவு' படத்தில் முதன்முறையாக பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு...

பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை! ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி

இறைச்சிகாக மாடுகள் உட்பட ஒருசில கால்நடைகளை விற்பனை செய்யக் கூடாது என மத்திய அரசு சமீபத்தில்