தமிழ்ப்பெண்ணை திருமணம் செய்யும் கிளென் மேக்ஸ்வெல்: தமிழில் திருமண பத்திரிகை!

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடி வருபவருமான கிளன் மேக்ஸ்வெல் ஒரு தமிழ் பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். இது குறித்த தமிழில் வெளியான திருமண பத்திரிகை தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிளன் மேக்ஸ்வெல் என்பது அனைவரும் அறிந்ததே. ஐபிஎல் தொடரில் இவர் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார் என்பதும் இந்த சீசனிலும் அவரை 11 கோடிக்கு ஏலம் எடுத்து பெங்களூர் அணி தக்க வைத்துக் கொண்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் வளர்ந்த தமிழ் பெண்ணான வினிராமன் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த மேக்ஸ்வெல், தற்போது அவரை திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறார்.

மணமகள் வினி ராமன் ஆஸ்திரேலியாவில் பார்மசி படித்தவர் என்பதும் சென்னை மேற்கு மாம்பத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய முறைப்படி இவர்களுடைய திருமணம் மார்ச் 20ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தனது திருமண பத்திரிக்கை தமிழில் அச்சடிக்க வேண்டும் என வினி ராமன் விரும்பியதை அடுத்து தமிழில் திருமண பத்திரிகை அச்சடிக்கப்பட்டு உள்ளது. இந்த திருமண பத்திரிகையை கிரிக்கெட், திரையுலக பிரபலங்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் மாக்ஸ்வெல் மற்றும் வினி ராமன் ஜோடிக்கு நெட்டிசன்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் நாயகியாகும் உக்ரைன் நடிகை!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 20வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி உள்ள நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. 

ஓட்காவை ஒரே மடக்கில் குடித்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

அமெரிக்காவில் 19 வயது இளைஞர் ஒருவர் தன்னுடைய நண்பர்களின் வற்புறுத்தலைக் கேட்டு ஒரே மடக்கில் ஓட்காவை காலி

திருமணத்தால் சர்ச்சை… சிறை தண்டனையை எதிர்நோக்கும் பங்களாதேஷ் வீரர்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரான நசீர் ஹொசைன்

உயிரைப் பறித்த லாஸா காய்ச்சல்... கொரோனா மாதிரி பாதிப்பை ஏற்படுத்துமா?

வைரஸ் பெருந்தொற்று நோய்களுள் ஒன்றாகக் கருதப்படும் லாஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இங்கிலாந்தில் முதல் முறையாக

பூமியைப் போல இன்னொரு கிரகம் கண்டுபிடிப்பு… ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்!

சூரியனுக்கு மிக நெருக்கமாக சுற்றிவரும் ஒரு புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் தற்போது