திடீரென இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை??? முடிவு குறித்து பிசிசிஐ!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அங்கு ஒருநாள் போட்டி, டி20 போட்டிகளை முடித்து கொண்டு தற்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது சிட்னியில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு திடீரென கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அந்தப் பரிசோதனையில் இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஊழியர்கள் யாருக்கும் கொரோனா இல்லை என்பதை பிசிசிஐ உறுதி செய்துள்ளது.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியில் கலந்து கொண்டுவிட்டு இந்தியாவிற்கு திரும்பினார் இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கு இடையில் ரோஹித் சர்மா உள்ளிட்ட 5 கிரிக்கெட் வீரர்கள் மெல்பர்னில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு சென்றதாகச் சர்ச்சை எழுந்தது. மேலும் அவர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது ரசிர்களுடன் தொட்டு பேசியதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கும் திடீரென கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டு இருக்கிறது.
அந்தப் பரிசோதனையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஊழியர்கள் யாருக்கும் கொரோனா இல்லை என்பதை பிசிசிஐ தெரிவித்து உள்ளது. இதனால் மெல்பர்னில் இருந்து இந்திய வீரர்கள் அனைவரும் சிட்னியில் நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்வார்கள் என்றும் பிசிசிஐ தெரிவித்து இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com