கொரோனா தடுப்பூசியை முற்றிலும் இலவசமாக அறிவித்து மக்களை மகிழ்வித்த அதிபர்!!!

  • IndiaGlitz, [Thursday,August 20 2020]

 

ஆஸ்திரேலிய அதிபர் ஸ்காட் மோரீசன் அந்நாட்டின் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இதற்காக கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் உலகிலேயே முன்னணியாகத் திகழும் ஆஸ்க்ஃபோர்ட் பல்கலைக் கழகத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது என்ற விளக்கத்தையும் அதிபர் தெரிவித்து இருக்கிறார். இங்கிலாந்தின் ஆஸ்க்ஃபோர்ட் பல்கலைக் கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனம் இரண்டும் இணைந்து கொரோனா கோவிஷீல்ட் என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர். தற்போது இந்த தடுப்பூசி மனிதர்கள் மீதான இரண்டாம்கட்ட சோதனையில் இருக்கிறது.

இச்சோதனையில் வெற்றிகரமான முடிவுகள் வெளியாகும்போது ஆஸ்திரேலியாவில் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரித்து விநியோகிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்காக ஆஸ்க்ஃபோர்ட் பல்கலைக் கழகத்துடன் 18 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.135 கோடி) மதிப்பிலான ஒப்பந்தத்தை ஆஸ்திரேலிய பிரதமர் மேற்கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி குறித்து நேற்று வெளியிடப்பட்ட ஒரு முக்கிய அறிவிப்பில் இந்த தடுப்பூசி கொரோனாவிற்கு எதிரான ஆன்டிபாடிகளை 14-28 நாட்களில் மனித உடலில் உருவாக்கி விடுகிறது என்றும் கூறப்பட்டது.

கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடிகளோடு டி செல்களை இந்தத் தடுப்பூசி உருவாக்குவது குறித்தும் முன்னமே அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதனால் பாதுகாப்பான மற்றும் வெற்றிகரமான கொரோனா தடுப்பூசியாக ஆகஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தின் கோவிஷீல்ட் உலகம் முழுவதும் நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மருந்தை மற்ற நாடுகள் வாங்க தற்போது பல்வேறு ஒப்பந்தங்களையும் மேற்‘கொண்டு வருகின்றனர்.

தற்போது இந்தியாவிலும் கோவிஷீல்ட் மருந்துக்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்துக்கட்ட சோதனைகளும் முடிவடையும் நிலையில் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு இந்தத் தடுப்பூசி மருந்து முதலில் இந்தியர்களுக்கு கிடைக்க வழிவகைச் செய்யப்படும் எனவும் நேற்று ஒரு புதிய அறிக்கை வெளியாகி இருந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அதிபர் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி தனது நாட்டின் 2 கோடி மக்களுக்கும் இலவசமாக வழங்க அறிவிப்பு வெளியிட்டு அந்நாட்டு மக்கள் மத்தியில் புது நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பொதுநலத்தோடும், சுயநலத்தோடும் வாழ்த்துகிறேன்: எஸ்பிபி குறித்து சத்யராஜ்

பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவில் இருந்து மீண்டு வர வேண்டும் என தமிழ் திரையுலகினர் அனைவரும் நாளை மாலை கூட்டுப் பிரார்த்தனை செய்ய உள்ளனர்.

எஸ்‌பிபி என்பது ஒரு பெயரல்ல. அது காற்றை இன்னிசை ஆக்கிய மருந்து. சிம்பு

பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனாவில் இருந்து மீண்டு வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்யாத திரையுலகினர்களே இல்லை என்று கூறலாம்.

ஆயிரம் நிலவில் ஆரம்பித்த எஸ்பிபி ஆயிரம் பிறைகள் காண வேண்டாமா? பிரபல நடிகரின் வீடியோ

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்காக கோடிக்கணக்கான ரசிகர்களும் ஏராளமான திரையுலகினர்களும்

ரஜினி, கமல் கூட்டு பிரார்த்தனையில் இணைந்த மாஸ் நடிகர்: பரபரப்பு தகவல் 

பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்காக ஒரு கூட்டுப் பிரார்த்தனை நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே

சோனுசூட் செய்த மேலும் ஒரு உதவி: நன்றி தெரிவித்த விநாயகர் பக்தர்கள்

திரைப்படங்களில் வில்லன் வேடத்தில் நடித்தாலும் நிஜத்தில் ஹீரோவாக மாறியவர் சோனுசூட் என்பது இந்த கொரோனா காலத்தில் அனைவரும் புரிந்துகொண்டனர்.