மனைவியிடம் திட்டு வாங்கிய ஆஸ்திரேலிய பவுலர்.. காரணம் அஸ்வின்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல ஆஸ்திரேலிய பந்துவீச்சுவாளர் தான் மனைவியிடம் திட்டு வாங்கியதாகவும் அதற்கு அஸ்வின் தான் காரணம் என பேட்டி ஒன்றில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையிலான டெஸ்ட் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை இந்தியா வீழ்த்தியது என்பது தெரிந்ததே. இந்த வெற்றிக்கு இந்தியாவின் சுழற் பந்துவீச்சாளர்கள் முக்கிய காரணம் என்பதும் குறிப்பாக அஸ்வின் எடுத்த 8 விக்கெட்டுகள் இந்தியாவின் வெற்றிக்கு பெரிதும் உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் நேதன் லயன் பேட்டி ஒன்றில் கூறியபோது நான் இந்தியா வருவதற்கு முன்பே அஸ்வின் பந்துவீச்சை லேப்டாப்பில் பலமுறை திரும்பத் திரும்ப பார்த்தேன். அதை பார்த்து என் மனைவி என்னை திட்டினார் என்று கூறினார்.
மேலும் எதிரணி பவுலராக இருந்தாலும் அஸ்வின் இடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கின்றது என்றும் அவரிடம் இருந்து சில விஷயங்களை கண்டு கொண்டாலும் தனக்கு பெரிது உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார். அஸ்வினிடம் நான் நிறைய பேசியிருக்கிறேன், என்னிடம் நிறைய விஷயங்களை அவர் பகிர்ந்து உள்ளார், இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாட்டு மண்ணில் சந்தித்தால் கூட நாங்கள் நிறைய பேசுவோம், அவரை பார்க்கும் போது சிறப்பாக பவுலிங் செய்ய வேண்டும் என்ற உத்வேகம் வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments