சிறுமிகளிடம் சில்மிஷம்… பிரபல கிரிக்கெட் வீரருக்கு 4 ஆண்டு சிறை!
- IndiaGlitz, [Thursday,December 23 2021] Sports News
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்கள் சமீபத்தில் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் சமீபத்தில் இளம்பெண் ஒருவருக்கு தகாத முறையில் குறுஞ்செய்தி அனுப்பியதாக பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
தற்போது இந்தச் சம்பவத்தை மிஞ்சும் அளவிற்கு அந்நாட்டு இளம்வீரர் ஆரோன் சம்மர்ஸ் என்பவர் சிறுமிகளுக்கு தகாத முறையில் வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப்பி மிரட்டிய சம்பவம் பூதாகரமாகியுள்ளது. இயைதடுத்து பெண் ஒருவர் அளித்த புகாரில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆரோன் சம்மர்ஸ்க்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிகப்பட்ச தண்டனையாக 4 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்திருக்கிறது.
மேலும் சிறுமிகளை மிரட்டி அவர்களிடம் இருந்து சேகரித்துவைத்திருந்த 80 புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆரோனிடம் இருந்து போலீசார் மீட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு பெருத் தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாகச் சிலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
இதற்குமுன்பு பாகிஸ்தான் நாட்டின் முன்னணி வீரர் யாஷிர் ஷாவின் நண்பர் பர்ஹான் துப்பாக்கி முனையில் 14 வயது சிறுமியை கடத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் துணை போனதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இப்படி கிரிக்கெட் வட்டாரத்தில் அடுத்தடுத்து மோசமான நிகழ்வுகள் அரங்கேறி வருவதால் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.