மனநல பிரச்சினையை சரிப்படுத்தும் மேஜிக் காளான்? செம சுவாரசியமான புது தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
மனம்நலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு பரிந்துரைக்கப்படும் மேஜிக் காளான் பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இதை பயன்படுத்த சட்டப்பூர்மாக ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்கும் தகவல் பலரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.
சைலோசைபினின் செயற்கை தன்மையால் உருவாக்கப்பட்ட சிந்தெடிக் காளான்கள் தீவிர மன அழுத்தப் பிரச்சனையை சரிசெய்யும் என்பதுபோன்ற கருத்துகள் உலகம் முழுவதும் கூறப்படுகின்றன. மேலும் இதுகுறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டு தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் கட்டுரை வெளியாகி இருக்கிறது.
ஆனால் செயற்கை காளான்கள் பற்றி முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை. பகுதி அளவு முடிவுகளைக் கொண்டு மருத்துவத் துறைக்கு இதைப் பயன்படுத்தக் கூடாது என அறிவியல் அறிஞர்கள் கூறியதால் சிந்தெடிக் காளான் எனப்படும் மேஜிக் காளான்களுக்கு பல நாடுகளில் இதுவரை தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் 3 ஆண்டு தீவிர விசாரணைக்குப் பிறகு முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் மேஜிக் காளான்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் மனச்சோர்வு, மன உளைச்சல் சம்பந்தப்பட்ட தீவிர மன அழுத்த நோயான PTSD பிரச்சனைக்கு இந்த மேஜிக் காளான் மற்றும் MDMA மருந்துகைள் இரண்டையும் பரிந்துரைக்கலாம் என்று கூறப்பட்டு இருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் உள்ள போதைப்பொருள் கண்காணிப்பு அமைப்பின் தெரப்யூடிக் குட்ஸ் அட்மினிஸ்ட்ரேஷன் TGA பரிந்துரையின் படி 3 ஆண்டுகளுக்குப் பிறகு செயற்கை காளான் முதல் முறையாக மருத்துவத் துறையில் பயன்பாட்டிற்கு வருகிறது. இதனால் ஜுலை 1 ஆம் தேதி முதல் மனநல பிரச்சனைக்கு இந்த மேஜிக் காளான்களை பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டு இருக்கும் நிலையில் மேஜிக் காளான் பற்றிய ஆர்வம் பலரிடையே அதிகரித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout