close
Choose your channels

ஆகஸ்ட் மாதம் மட்டும் இத்தனை படங்கள் ரிலீஸா? நீளும் பட்டியல்..!

Friday, July 12, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின விடுமுறை தினத்தில் மட்டும் சில முக்கிய படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சின்ன பட்ஜெட் படங்களும் ஏராளமாக வெளியாக இருப்பதாக அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் திரைப்படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான ’தங்கலான்’ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அதேபோல் விஜய் ஆண்டனியின் நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான ’மழை பிடிக்காத மனிதன்’ என்ற திரைப்படமும் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் சமீபத்தில் இந்த படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ’ரகு தாத்தா’ என்ற திரைப்படம் ஏற்கனவே ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

அதேபோல் பிரபல தெலுங்கு நடிகர் நானி நடித்த ’சரிபோதா சனிவாரம்’ என்ற படத்தின் தமிழ் பதிப்பான ’சூர்யாவின் சனிக்கிழமை’ என்ற படம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியாக உள்ளது. நானி ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சன்னி லியோன் மற்றும் பிரியாமணி நடித்த ’கொட்டேஷன் கேங்’ என்ற திரைப்படம் ஹிந்தியில் மட்டுமின்றி தமிழிலும் வெளியாகிறது என்பதும் இந்த படத்தை டிரம்ஸ் சிவமணி இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமும் ஆகஸ்டில் வெளியாகவுள்ளது.

அதேபோல் நகுல் நடித்த ’வாஸ்கோடகாமா’ என்ற திரைப்படமும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. மேலும் ’கூழாங்கல்’ படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம் ’ஜமா’. இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும் இந்த படமும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகியுள்ளது.

மேலும் சிம்பு தேவன் இயக்கத்தில் யோகி பாபு நடித்த ’போட்’ என்ற படம் சமீபத்தில் டிரைலர் வெளியானது என்பது இந்த படமும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பாலாவின் ’வணங்கான்’, சிவகார்த்திகேயனின் ’அமரன்’ ஜெயம் ரவியின் ’ஜெனி’ அருள்நிதியின் ’டிமான்டி காலனி’ விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ ஆகிய திரைப்படங்களும் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படங்கள் ஆகஸ்ட்டில் வெளியாகுமா? அல்லது அடுத்தடுத்த மாதங்களில் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment