மீண்டும் மாணவர்களுடன் இணைந்த ராகவா லாரன்ஸ்

  • IndiaGlitz, [Monday,February 06 2017]

உலகையே திரும்பி பார்க்க வைத்த சமீபத்திய நிகழ்ச்சி மெரீனாவில் மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு புரட்சி போராட்டம். இந்த போராட்டத்தின் பயனாக மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஜல்லிக்கட்டுக்கான நிரந்தர சட்டத்தை இயற்றின. இந்த போராட்டத்திற்கு அனைத்து துறையினர்களும் ஆதரவு கொடுத்தாலும் அதில் திரைத்துறையினர்களின் பங்கு சற்று அதிகம் என்றே கூறலாம். குறிப்பாக களத்தில் மாணவர்களுடன் இறங்கி போராடியதோடு, அவர்களின் தேவையையும் பூர்த்தி செய்தவர் ராகவா லாரன்ஸ்

மேலும் தேவைப்பட்டால் மாணவர்களுடன் இணைந்து அரசியலிலும் குதிக்க தயார் என்று கூறியவர் ராகவா லாரன்ஸ். இந்நிலையில் அவர் நடித்து முடித்த 'மொட்டசிவா கெட்டசிவா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

மாணவர்கள் மேல் மிகுந்த பாசம் வைத்துள்ள ராகவா லாரன்ஸ், தன்னுடைய இந்த படத்தின் இசை வெளியீட்டை மாணவர்களிடையே நடத்தியதுதான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு. அதுமட்டுமின்றி இந்த படத்தின் பாடல்களை தமிழக விவசாயிகளின் பிரதிநிதிகள் வெளியிட அதை மாணவர்கள் பெற்றுக்கொண்டார்கள். வழக்கமாக விஐபிக்கள் மட்டுமே ஒரு படத்தின் பாடல்களை வெளியிட்டு வந்த நிலையில் இந்த நிகழ்ச்சி முற்றிலும் வித்தியாசமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.