ஆளுனருக்கு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறிய அதிரடி யோசனை

  • IndiaGlitz, [Monday,February 13 2017]

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காணக்கூடிய இடத்தில் இருக்கும் ஒரே நபரான தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் விரைவில் தனது முடிவை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முடிவை அறிவிக்கும் முன் இறுதியாக அவர் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி அவர்களிடம் ஆலோசனை கேட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை கூட்ட தமிழக ஆளுநருக்கு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி யோசனை கூறியதாகவும், இந்த சிறப்பு சட்டமன்றத்தில் சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருமே தங்களின் பெரும்பான்மையை ஒரே நேரத்தில் ஒருவாரத்தில் நிரூபிக்க அழைப்பு விடுக்கலாம் என்று அவர் ஆலோசனை கூறியதாகவும் தகவல்கள் வந்துள்ளது. மேலும் சசிகலா மீதான சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பு வரும் வரை கவர்னர் காத்திருப்பது சரிதான் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த சிறப்புக்கூட்டத்தொடர் நாளை தீர்ப்பு வெளிவந்தவுடன் கூட்ட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.