சாலை இல்லை, தெருவிளக்கு இல்லை. ஆனால் விஜய் மட்டும் உண்டு. ஒரு அதிசய கிராமம்

  • IndiaGlitz, [Wednesday,August 10 2016]

தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான உமேஷ் கேசவன் சமீபத்தில் உதவி கலெக்டராக கேரளாவில் உள்ள பாலக்காட்டில் நியமனம் செய்யப்பட்டார். அந்த பகுதியில் உள்ள அட்டப்பாடி என்ற கிராமத்திற்கு சமீபத்தில் சென்றபோது, தெருவிளக்கு, கழிப்பறை, சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் அந்த கிராமத்தில் இல்லாததை பார்த்ததார். ஆனால் இவையெல்லாம் இல்லாத அந்த கிராமத்தில் விஜய் ரசிகர்கள் அதிகளவு இருந்ததை கண்டு அவர் ஆச்சரியம் அடைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தபோது, "நேற்று அட்டப்பாடி என்ற கிராமத்திற்கு சென்றேன். மிகவும் பின்தங்கிய பகுதியாக இருந்த அந்த கிராமத்தில் இந்த நூற்றாண்டிலும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் வாழும் மக்களை சந்திக்க நேர்ந்தது. அங்குள்ள ஒரு இளைஞரிடம் கழிப்பறை எங்கே என்று நான் கேட்டபோது ஒரு பெரிய வெட்டவெளியை காண்பித்து இதுதான் எங்கள் அனைவருக்கும் கழிப்பறை என்று கூறினார். வெளியுலகம் தெரியாமல், கல்வி அறிவு இல்லாமல் அங்குள்ள இளைஞர்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றனர். விவசாயம் இல்லாத நாட்களில் தமிழ் சேனல்களில் விஜய் படங்களையும், விஜய்யின் பாடல்களையும் கேட்பதுதான் தங்கள் பொழுதுபோக்கு என்று அவர்கள் கூறினார்கள். கிராமங்களின் முன்னேற்றத்திற்காக செலவு செய்யப்படும் கோடிக்கணக்கான ரூபாய் இந்த கிராமத்தை சென்றடையவில்லை. ஆனால் விஜய் மட்டும் சென்றுள்ளார்' என்பதை காணும்போது ஆச்சரியமாக இருந்தது' என்று கூறியுள்ளார்.
பின்னர் அந்த கிராமத்தில் இருந்து திரும்பி வந்ததும், விஜய்யின் அலுவலகத்தை தொடர்பு கொண்ட உமேஷ் கேசவன், அட்டப்பாடி கிராம மக்களின் கல்வி மற்றும் அடிப்படை ஆதாரங்கள் குறித்து விழிப்புணர்வு செய்ய அட்டப்பாடி கிராமத்திற்கு விஜய் நேரில் சென்றால், அந்த கிராம மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுவதோடு அவர்களது வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்று கூறியுள்ளார். எனவே அவருடைய கோரிக்கையை ஏற்று அந்த கிராமத்திற்கு விஜய் விரைவில் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
IG EXCLUSIVE : Vijay Replies To His Online Fans