'அட்டக்கத்தி' தினேஷின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
அட்டக்கத்தி தினேஷ் நடித்த ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் அவர் தற்போது ‘வாராயோ வெண்ணிலவே’, ‘பல்லு படாம பாத்துக்கோ’ மற்றும் ‘நானும் சிங்கிள் தான்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அட்டக்கத்தி தினேஷ் நடிக்கும் அடுத்த படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே கதிர், ஓவியா, வேல ராமமூர்த்தி, கலையரசன் உள்பட பலரது நடிப்பில் ஜிவி பிரகாஷ் தயாரிப்பில் உருவான ’மதயானைக்கூட்டம்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் சுகுமாறன் இயக்கும் இந்த படத்திற்கு ‘தேரும் போரும்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
விக்ரம் சுகுமாரன் இயக்கும் அடுத்த படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சுகுமார் ஒளிப்பதிவில் ராஜீவன் கலை இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகர் இசையில் இந்த படம் உருவாகவுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் உள்பட மற்ற விவரங்கள் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
Here is the Title look of #TherumPorum Shoot begins soon!
— Nallusamy Pictures (@NalluPictures) February 21, 2020
Directed by #VikramSugumaran
Starring @Dineshvcravi @NalluPictures @justin_tunes @ThaiSaravanan @mynnasukumar @Actor_ArulDass @teamaimpr @CtcMediaboy pic.twitter.com/pPOcCKiskL
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com