'கபாலி' நடிகரின் 'உள்குத்து' முடிவடைந்தது

  • IndiaGlitz, [Wednesday,December 23 2015]

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் 'அட்டக்கத்தி' தினேஷ் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தினேஷ் நடித்து வரும் இன்னொரு படமான 'உள்குத்து' திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 'உள்குத்து' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை இந்த படத்தின் இயக்குனர் கார்த்திக்ராஜூ, தன்னுடைய சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இவர் ஏற்கனவே தினேஷ் நடித்த 'திருடன் போலீஸ்' என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்டக்கத்தி, எதிர்நீச்சல் ஆகிய படங்களில் தினேஷூக்கு ஜோடியாக நடித்த நடிகை நந்திதா ஸ்வேதா மீண்டும் அவருடன் இணைந்து நடித்துள்ள இந்த படத்தில் பாலசரவணன், ஜான்விஜய், சாயாசிங், திலீப்சுப்பராயன் உள்பட பலர் நடித்துள்ளனர். 'பண்ணையாரும் பத்மினியும்', ஆரஞ்சு மிட்டாய்' போன்ற படங்களுக்கு இசையமைத்த ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.