'கடவுள் எனக்கு அனுப்பி வைத்த முதல் குட்டி நண்பன்': பிறந்த நாள் வாழ்த்து கூறிய அட்லி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் அட்லி தனது மகனின் முதலாவது பிறந்தநாள் குறித்த பதிவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து, ‘கடவுள் எனக்கு அனுப்பிய முதல் குட்டி நண்பன்’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளதை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
இயக்குனர் அட்லி கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி நடிகை கிருஷ்ணபிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 9 ஆண்டுகள் கழித்து 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் மகன் பிறந்தார். அவருக்கு மீர் என்று பெயர் வைக்கப்பட்டது.
அட்லி மற்றும் அவரது மனைவி பிரியா ஆகிய இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் அவ்வப்போது தங்கள் மகனின் புகைப்படங்களை பதிவு செய்து வந்தனர்.
இந்த நிலையில் அட்லி தனது மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி செய்துள்ள பதிவில் நெகிழ்ச்சியாக ‘கடவுள் எனக்கு அனுப்பி வைத்த குட்டி நண்பரான எங்கள் சிறியவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஒரு ஆண்டு முடிந்து விட்டது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. இந்த அழகான சிறிய பரிசை கொடுத்த கடவுளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் மகனை நான் மிகவும் நேசிக்கிறேன்.
எங்கள் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக இன்று இந்த குட்டி நண்பன் கிடைத்துள்ளார். கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும். அம்மாவும் அப்பாவும் உன்னை அதிகபட்சமாக நேசிக்கிறார்கள், கடவுள் உன்னை நிறைய புன்னகையுடன் மகிழ்ச்சியுடன் வைத்திருப்பார்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments