'விஜய் 59' வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அட்லி
- IndiaGlitz, [Thursday,September 10 2015]
இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் கதை, கடந்த 1990ஆம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் நடித்த 'சத்ரியன்' படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டு வருவதாக கடந்த இரண்டு நாட்களாக இணையதளங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது அட்லி இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அட்லி, 'விஜய் 59' திரைப்படம் விஜயகாந்த் நடித்த 'சத்ரியன்' படத்தின் தழுவல் என்ற செய்தி வெறும் வதந்தியே' என்று தெரிவித்துள்ளார். 'விஜய் 59' படக்குழுவினர்களும் அட்லியின் கருத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே கடந்த இரண்டு நாட்களாக 'விஜய் 59' குறித்து எழுந்த வதந்திக்கு ஒருவழியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
'விஜய் 59' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. விரைவில் படக்குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக கோவா செல்லவுள்ளதாகவும், இன்னும் ஓரிரு மாதங்களில் 'விஜய் 59' படக்குழுவினர் சீனா செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.