'விஜய் 59' வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அட்லி

  • IndiaGlitz, [Thursday,September 10 2015]

இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் கதை, கடந்த 1990ஆம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் நடித்த 'சத்ரியன்' படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டு வருவதாக கடந்த இரண்டு நாட்களாக இணையதளங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது அட்லி இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அட்லி, 'விஜய் 59' திரைப்படம் விஜயகாந்த் நடித்த 'சத்ரியன்' படத்தின் தழுவல் என்ற செய்தி வெறும் வதந்தியே' என்று தெரிவித்துள்ளார். 'விஜய் 59' படக்குழுவினர்களும் அட்லியின் கருத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே கடந்த இரண்டு நாட்களாக 'விஜய் 59' குறித்து எழுந்த வதந்திக்கு ஒருவழியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

'விஜய் 59' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. விரைவில் படக்குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக கோவா செல்லவுள்ளதாகவும், இன்னும் ஓரிரு மாதங்களில் 'விஜய் 59' படக்குழுவினர் சீனா செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

உலகப்புகழ் பெற்ற விவிஐபி உடன் நடிகை ஸ்ரேயா

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 'சிவாஜி', விஜய்யுடன் 'அழகிய தமிழ் மகன்', தனுஷுடன் 'திருவிளையாடல் ஆரம்பம்'...

5வது வருடத்தில் 50வது படமாகும் விஜய்யின் 'புலி'

அமெரிக்காவில் தமிழ் படங்களை ரிலீஸ் செய்யும் விநியோக நிறுவனங்களில் ஒன்று ATMUS Entertainment...

தேர்தலுக்கு மறுநாள் இரு அணிகளும் இணைந்துவிடும். விஷால்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அக்டோபர் 18 என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து சரத்குமார் மற்றும் விஷால்...

உதயநிதி படத்தின் மூன்றாவது ஹீரோயின்?

இயக்குனர் திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த 'கெத்து' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது அவர் 'ஜாலி எல்.எல்.பி'...

நடிகர் சந்தானம் வளர்க்கும் தாடியின் ரகசியம்?

கடந்த சில வருடங்களாக காமெடி நடிகர்களில் முன்னணி இடத்தில் இருந்து வந்த நடிகர் சந்தானம், 'இனிமே இப்படித்தான்'...