எங்கள் வீட்டின் ஆலமரம் சரிந்தது: இயக்குனர் அட்லியின் சோக டுவிட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’தெறி’ ’மெர்சல்’ மற்றும் ’பிகில்’ ஆகிய மூன்று தொடர் வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அட்லீயின் வீட்டில் நிகழ்ந்த சோகம் குறித்து அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது
அட்லி தனது டுவிட்டரில் தனது பெரியப்பா காலமாகிவிட்டதாகவும் தங்களது வீட்டின் ஆலமரம் போல் இருந்த அவரது மறைவு தங்களுக்கு மிகப்பெரிய இழப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது:
என் பெரியப்பா மறைந்த நீதிபதி செளந்திர பாண்டியன் காலமானார். எங்கள் குடும்பத்தின் ஆலமரம். மிகப்பெரிய இழப்பு. இதனை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை. அவரை நான் மிகவும் நேசிக்கிறேன், பெரியப்பா, நீங்கள் எப்போதும் எங்கள் ராஜா, நாங்கள் உங்களை ரொம்பவே மிஸ் செய்கிறோம். நிம்மதியாக ஓய்வெடுங்கள் என்று பதிவு செய்துள்ளார்.
அட்லியின் பெரியப்பா மறைந்ததை அடுத்து திரையுலகினருக்கு அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
My periyappa late justice M.Sowndra Pandian has passed away,Banyan of the whole family,Completely Devastated painful can’t take it & don’t know how to com over it,Love him the most,Periyappa ur always our king & role model, Love u & Will miss u , rest in peace... pic.twitter.com/LTvFXFQ9on
— atlee (@Atlee_dir) April 25, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com