வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கு இதய அஞ்சலி செலுத்திய அட்லி!

  • IndiaGlitz, [Wednesday,June 17 2020]

இந்தியா மற்றும் சீன எல்லையான லடாக் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையிலான மோதலில் முதல் கட்டமாக 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி உள்பட வீரமரணமடைந்த மூவருக்கும் இந்திய நாடே வணக்கம் செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அதன் பின் நேற்று இரவு திடீரென படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 17 ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டதால் இந்திய தரப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் முதல் கட்டமாக உயிரிழந்த 3 இந்திய ராணுவ வீரர்களுக்கு இயக்குனர் அட்லி தனது இதய அஞ்சலியை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த பழனி மற்றும் சந்தோஷ் பாபு, ஓஜா ஆகிய மூவருக்கும் தனது இதய அஞ்சலி என்றும் மூவருக்கும் சல்யூட் என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் அட்லீயின் இந்த பதிவு தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது

More News

சீன தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய டுவீட்: சிஎஸ்கே டாக்டர் பதவி நீக்கம்

இந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு இருதரப்பு ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்

தமிழக முதல்வர் அலுவலக தனிச்செயலாளர் கொரோனாவால் உயிரிழப்பு

கடந்த சில வாரங்களாகவே சென்னையில் கொரொனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருவதும் தினமும்

கொரோனா சிகிச்சைக்கு குறைந்த விலையில் மருந்து: கேம் சேஞ்சராக இருக்குமா என எதிர்பார்ப்பு!!!

கொரோனா சிகிச்சைக்கு ஒரு புதிய கேம் சேஞ்சராக இருக்கும் என ஸ்டிராய்டு வகை மருந்து ஒன்றை பிரிட்டன் அதிபர் பரிந்துரை செய்திருக்கிறார்.

சீன ராணுவத்தினரின் பலி எண்ணிக்கை எவ்வளவு? அமெரிக்க உளவுத்துறையின் தகவலால் பெரும் பரபரப்பு 

இந்தியா சீன ராணுவ வீரர்கள் இடையே நேற்று முன்தினம் நள்ளிரவு லடாக் பகுதியில் உள்ள கால்வான் என்ற இடத்தில் நடந்த மோதல் உலக நாடுகளையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சீனாவை அடுத்து பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியாவை சுற்றி வளைக்கும் அண்டை நாடுகள்

நேற்று முன்தினம் நள்ளிரவு லடாக் எல்லையில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 43 வீரர்கள் பலியாகி