ஆசிரியர் தினத்தில் அட்லி கொடுத்த குருதட்சணை

  • IndiaGlitz, [Wednesday,September 05 2018]

இன்று ஆசிரியர் தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு கொண்டாடப்படும் இந்த ஆசிரியர் தினத்தில் நல்லாசிரியர்கள் கெளரவிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குனர் அட்லி, தனது தொழில்குருவான ஷங்கருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். 'ஆசிரியர் தினம்' என்பது வருடத்திற்கு ஒருநாள் தான் வருகிறது. ஆனால் நீங்கள் கற்றுக்கொடுத்த தொழில் எனக்கு தினம் தினம் உதவி செய்கிறது. உங்களை கெளரவப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று இயக்குனர் அட்லி தனது சமூக வலைத்தளத்தில் குருதட்சணை பதிவு ஒன்றை செய்துள்ளார்.

இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லி, 'ராஜா ராணி', 'தெறி' மற்றும் 'மெர்சல்' என தொடர்ச்சியாக மூன்று ஹிட் படங்களை இயக்கியுள்ளார். அவருடைய அடுத்த படத்திலும் தளபதி விஜய் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.