விஜய்க்கு அடுத்த இடத்தில் பிரபாஸ். 'பாகுபலி 2' விழாவில் வெளியான ரகசியம்

  • IndiaGlitz, [Wednesday,March 29 2017]

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்துள்ள 'பாகுபலி 2' திரைப்படம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் வசூல் ரூ.1000 கோடியை நெருங்கும் என்று எதிர்பார்ப்பதால் பிரபாஸின் மார்க்கெட் தற்போதே எகிறியுள்ளது.

இந்நிலையில் 'பாகுபலி' படத்தின் பாகங்களுக்காக கிட்டத்தட்ட ஐந்து வருடங்களை ஒதுக்கிவிட்ட பிரபாஸ் இனிமேல் வருடத்திற்கு இரண்டு படங்களில் நடிக்கவுள்ளதாக ரசிகர்களிடம் வாக்குறுதி கொடுத்துள்ளார்.

அதன்படி 'பாகுபலி 2' படத்திற்கு பின்னர் சுஜித் இயக்கத்தில் ஒரு தெலுங்கு படத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ளார். இதே கதையை பிரபாஸ் கோலிவுட் இயக்குனர் அட்லியிடம் கூறி தமிழில் இயக்க ஆலோசனை கூறியுள்ளாராம். அட்லியும் இதற்கு ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதன் காரணமாகத்தான் பொதுவாக தெலுங்கு திரைப்பட விழாவில் கலந்து கொள்ளாத அட்லி, சமீபத்தில் நடந்த 'பாகுபலி 2' விழாவில் கலந்து கொண்டதாக தெரிகிறது.

தற்போது விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தை இயக்கி வரும் அட்லி, இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் பிரபாஸ் படத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகவுள்ளது.

More News

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய ஐடி ஊழியர்கள். முழு விபரம்

தமிழக விவசாயிகள் கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் போராடம் நடத்தி வருகின்றனர். முதலில் ஒரு குழுவாக ஆரம்பித்த இந்த போராட்டம் இன்று நாடு முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

ரஜினியின் '2.0' படத்தின் முக்கிய பணி முடிந்தது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வருகிறது...

விஜய்யின் அரசியல் பிரவேச வதந்தி குறித்து எஸ்.ஏ.சி விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்று ஒருபுறம் கடந்த பல ஆண்டுகளாக விவாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு புறம் இளையதளபதி விஜய் அரசியலுக்கு எப்போது வருவார் என்ற விவாதமும் சமூக வலைத்தளங்களில் நடந்து வருகிறது...

கமல் நண்பரின் இணையதளம் திடீர் முடக்கம். காரணம் என்ன?

கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியவரும் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளம் திடீரென ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

ஜெய்-அஞ்சலி காதல் திருமணம் எப்போது?

தமிழ் திரையுலகில் அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, பிரசன்னா-சினேகா நட்சத்திர ஜோடி போல் இன்னொரு நட்சத்திர ஜோடியான ஜெய்-அஞ்சலி உருவாகவுள்ளதாக கடந்த சில நாட்களாக வதந்தி வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த வதந்தியை இரு தரப்பினர்களும் மறுக்காததால் இதில் உண்மை இருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது...