close
Choose your channels

எந்த ஒரு விஜய் ரசிகனும் கொடுத்த வாக்கை மீறமாட்டான்: 'ஜவான்' விழாவில் அட்லீ..!

Thursday, August 31, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்த நிலையில் இந்த விழாவில் ‘ஜவான்’ திரைப்படத்தின் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால் கேரளாவில் இருந்ததால் இந்த விழாவில் நடிகை நயன்தாரா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த விழாவில் இயக்குனர் அட்லீ பேசும்போது, ‘ஜவான்’ படத்தின் கதாநாயகி யார் என்று நான் யோசிக்கும்போது உடனே எனது டார்லிங் நயன்தாரா தான் நினைவுக்கு வந்தார். இப்போது அவர் கேரளாவில் இருப்பதால் அவரால் இந்த நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை என்று தெரிவித்தார்.

மேலும் அனிருத் இசை உலகில் ஒரு தவிர்க்க முடியாத நபர் என்றும் ஷாருக்கானிடம் பாடலை போட்டு காட்ட வேண்டும், உடனே பாடல் வேண்டும் என்று நான் கேட்டவுடன் ஒரே நாள் இரவில் பாடலை போட்டுக் கொடுத்தார் என்றும் கூறினார். மேலும் இந்த படத்தில் 13 பாடல்கள் உள்ளன என்றும் அட்லீ தெரிவித்தார்.

விஜய் சேதுபதி குறித்து அட்லீ கூறியபோது ’வில்லனாக விஜய் சேதுபதி இந்த படத்தில் நடித்துள்ளார். அவர் செய்ததை வேறு எந்த ஹீரோவும் செய்ய முடியாது. அந்த தைரியமும் அவர்களுக்கு இருக்காது. அவர் போகும் உயரத்திற்கு வேறு யாரும் வர முடியாது என்று தெரிவித்தார்.

மேலும் என்ன நடந்தாலும் உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள் என்றும் எதிர்மறை வரும் அப்போது என் தலைவன் விஜய் சொல்கிற மாதிரி எதிர்மறையை மறந்து விடுங்கள் என்றும் அட்லி தெரிவித்தார்.

இந்த படம் உருவாக காரணமே விஜய் தான், இந்த படத்திற்காக அவர் என்னை அதிகமாக ஊக்கப்படுத்தினார், எது நடந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் உங்கள் வேலையை கவனம் செலுத்துங்கள் என்று எனக்கு விஜய் அறிவுரை கூறியதாகவும் கூறினார்.

எந்த ஒரு விஜய் ரசிகன் கொடுத்த வாக்கை மீறமாட்டான், அதேபோல்தான் நானும் கொடுத்த வாக்கை மீராமல் இந்த படத்தை முடித்துக் கொடுத்தேன் என்றும் இயக்குனர் அட்லீ தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment