'தளபதி 68' படத்தின் கதை இதுதான்: ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அட்லி!

  • IndiaGlitz, [Wednesday,May 25 2022]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 68வது திரைப்படத்தை அட்லி இயக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவலை இயக்குனர் அட்லி தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் பெரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ’பிகில்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பாக இந்த படத்தில் சில நிமிடங்களே வந்தாலும் ராயப்பன் கேரக்டர் விஜய்யின் வித்தியாசமான நடிப்பில் அமைந்திருக்கும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் டுவிட்டரில் ’பிகில்’ படத்தின் ராயப்பனின் முழு கதையும் சொல்லலாமே? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள அட்லி, ‘செஞ்சிட்டா போச்சு’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகயிருக்கும் ’தளபதி 68’ திரைப்படம் ’பிகில்’ திரைப்படத்தின் முந்தைய பாகமாக இருக்கலாம் என்றும் அதில் ராயப்பனின் இளவயது சம்பவங்கள் கொண்ட கதையாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஷாருக்கான் நடித்து வரும் ’லயன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வரும் அட்லி இந்த படத்தை முடித்தவுடன் ’தளபதி 68’ படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தளபதி விஜய் நடித்து வரும் 66வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ’தளபதி 67’ படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

முரட்டு சிங்கிள்ஸ்களை வெறுப்பேத்தும் பிக்பாஸ் போட்டியாளரின் மனைவி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரும் தமிழ் நடிகருமான கணேஷ் வெங்கட்ராமனின் மனைவி நிஷா கிருஷ்ணன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ,

தனியார் பள்ளிகளில் இலவசமாகப் படிக்க வேண்டுமா? விண்ணப்பிக்க இன்றே கடைசி…

பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இலவசமாகப் படிக்கும் வகையில் இலவசக் கட்டாயக்

அஜித்துடன் மோதும் கார்த்தி: தீபாவளி ரிலீஸ் என அறிவிப்பு!

அஜித் நடித்து வரும் 'ஏகே 61' என்ற திரைப்படம் வரும் தீபாவளிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதே தினத்தில் கார்த்தியின் 'சர்தார்' படமும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால்

'பாகுபலி', 'கேஜிஎப்' பாணியில் ஒரு படம்: பிரபல இயக்குனருடன் இணைகிறார் சூர்யா!

'பாகுபலி', 'கேஜிஎப்' போன்ற பிரம்மாண்டமான படத்தை உருவாக்குவதற்காக பிரபல இயக்குனருடன் நடிகர் சூர்யா இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது 

பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாறு: ரஜினி மகள் இயக்குகிறாரா?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்க இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.