ஸ்கூல் முடித்து விட்டாயா என கிண்டல் செய்த அஜித்... பிரபல இயக்குனர் பகிர்ந்த தகவல்..!

  • IndiaGlitz, [Wednesday,November 15 2023]

’ஆரம்பம்’ படத்தின் படப்பிடிப்பின் போது தான் அஜித்தை முதன் முதலாக சந்தித்ததாகவும் அப்போது தன்னை பார்த்து ’ஸ்கூல் படித்து முடித்து விட்டாயா’ என அஜித் கிண்டல் செய்ததாகவும் பிரபல இயக்குனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் அட்லி என்பதும் விஜய்யை வைத்து மூன்று ஹிட் படங்களை கொடுத்த அட்லி சமீபத்தில் ஷாருக்கான் நடித்த ’ஜவான்’ திரைப்படத்தை இயக்கிய நிலையில் அந்த படம் ரூ.1000 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஷாருக்கான் மற்றும் விஜய் ஆகிய இருவரும் நடிக்கும் ஒரு படத்தை இயக்க இருப்பதாக அட்லி கூறியுள்ள நிலையில் தற்போது அவர் அஜித்துக்கும் ஒரு பயங்கரமான ஸ்கிரிப்ட் வைத்துள்ளதாக கூறியுள்ளார். அஜித் எப்போது ஓகே சொல்கிறாரோ அப்போது அஜித் படத்தை இயக்க தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதன் முதலாக ’ஆரம்பம்’ படத்தின் படப்பிடிப்பின்போது தான் நயன்தாரா மூலம் அஜித்தை சந்தித்தேன் என்றும் அப்போது அஜித் தன்னை பார்த்து கிண்டலாக ’நீ ஸ்கூல் படித்து முடித்து விட்டாயா’ என கேட்டது தனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது என்று கூறினார். ஆனால் அதே நேரத்தில் தான் மிகவும் கஷ்டமான நேரத்தில் இருந்த போது அஜித் தனக்கு நம்பிக்கை ஊட்டியுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.