அட்லியின் அடுத்த படத்தில் ரஜினியா? கமலா? மாறுபட்ட செய்திகளால் ரசிகர்கள் குழப்பம்..!

  • IndiaGlitz, [Monday,July 01 2024]

அட்லி அடுத்த படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் அவருடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியான நிலையில் தற்போது அட்லி - சல்மான் கான் படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக கூறப்படுவது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ’ஜவான்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது என்பது தெரிந்தது. இதனை அடுத்து அவர் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் அந்த படம் ட்ராப் என்றும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் மீண்டும் பாலிவுட் செல்ல இருக்கும் அட்லி, சல்மான் கான் அடுத்த படத்தை இயக்க இருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் அந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாகவும், சல்மான்கான் மற்றும் ரஜினிகாந்த் இணையும் முதல் படம் என்பதால் இந்த படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூல் செய்யும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது வந்துள்ள தகவல் படி அட்லி - சல்மான்கான் படத்தில் கமல்ஹாசன் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் இந்திய திரையுலகில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களில் ஒன்றும் என்றும் கூறப்படுகிறது.

அட்லியின் அடுத்த படத்தில் சல்மான் கான் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்னொரு ஹீரோவாக நடிப்பது ரஜினியா? கமலா? என்ற குழப்பத்திற்கு விரைவில் விடை கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

கடக ராசி பலன்கள் 2024 ஜூலை முதல் செப்டம்பர் வரை ஆதித்ய குருஜி கணிப்பு !

கடக ராசிக்காரர்களுக்கு இந்த மூன்று மாதங்கள் மிகவும் முக்கியமானவை.

மிதுன ராசி பலன்கள் 2024 ஜூலை முதல் செப்டம்பர் வரை ஆதித்ய குருஜி கணிப்பு !

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மூன்று மாதங்கள் மிகவும் சிறப்பானவை என்று ஆதித்ய குருஜி கணித்துள்ளார்.

ரிஷப ராசி பலன்கள் 2024 ஜூலை முதல் செப்டம்பர் வரை ஆதித்ய குருஜி கணிப்பு !

ரிஷப ராசி அன்பர்களுக்கு, இந்த மூன்று மாதங்களில் ராசி நாதன் சுக்கிரன், 3, 4, 5, 6 என 4ம் இடங்களில் மாறி மாறி சஞ்சரிப்பார்.

பாலிவுட் செல்லும் மடோன் அஸ்வின்.. அதற்கு முன் தமிழில் ஒரு சம்பவம்.. ஹீரோ யார் தெரியுமா?

யோகி பாபு நடித்த 'மண்டேலா' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குனர் மடோன் அஸ்வின் அடுத்ததாக பாலிவுட்டில் ஒரு திரைப்படம்

'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' தங்கமயிலுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் படுத்த படுக்கையாய்.. அதிர்ச்சி புகைப்படம்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும் நல்ல இடத்தை பெற்று வருகிறது என்பதும் தெரிந்தது.