விஜய்யுடன் இவரையும் இணைத்து படம் பண்ண வேண்டும்: அட்லீயின் வேற லெவல் கனவு..!

  • IndiaGlitz, [Sunday,September 17 2023]

அட்லி இயக்கிய ‘ஜவான்’ திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பதும் இந்த படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் ’ராஜா ராணி’ ’தெறி’ ’மெர்சல்’’ பிகில்’ மற்றும் ‘ஜவான்’ என 5 சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து, தோல்வியே அடையாத இயக்குனர் என்ற பெருமையை பெற்றுள்ள அட்லியின் அடுத்த படம் என்ன? அவரது அடுத்த பட ஹீரோ யார்? என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

தற்போது கசிந்துள்ள தகவல் படி அட்லீயின் அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அட்லி சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய்யின் இன்னொரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை தனக்கு இருப்பதாகவும், அது சரியான நேரத்தில் நிறைவேறும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல விஜய் மற்றும் ஷாருக்கான் இருவரையும் சேர்த்து ஒரே படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்பது எனது கனவு என்றும் அதுவும் விரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

இதுவரை எந்த இயக்குனரும் முயற்சிக்காத விஜய் மற்றும் ஷாருக்கானை ஒரே படத்தில் நடிக்க வைப்பது என்பது அட்லீயால் நிச்சயம் சாத்தியமாகும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த நாள் எப்போது வரும் என்பதை ஆவலுடன் ரசிகர்களும் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.