close
Choose your channels

அட்லியின் அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்.. 'தளபதி 68' இயக்குனர் பட்டியலில் இருந்து வெளியேற்றமா?

Monday, May 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 68’ படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்பது இன்னும் முடிவு செய்யாத நிலையில் இந்த பட்டியலில் இதுவரை இருந்த அட்லி தற்போது வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 68’ திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் கோபிசந்த், தமிழ் இயக்குனர்களான வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ், அட்லி உட்பட ஒரு சிலரின் பெயர்கள் அடிபட்டது. இந்த படத்தின் இயக்குனர் யார் என்பதை இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’தளபதி 68’ படத்தை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் ஒருவராக இருந்த அட்லி தற்போது அந்த லிஸ்டில் இருந்து வெளியேறி உள்ளதாக தெரிகிறது. தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்து வரும் ’ஜவான்’ என்ற திரைப்படத்தை இயக்கி வரும் அட்லி, மீண்டும் ஒரு பாலிவுட் திரைப்படத்தை தான் இயக்க உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

அட்லி இயக்கம் இருக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே வருண் தவான் - அட்லி இணையும் பாலிவுட் படம் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment