அட்லி பட நடிகரின் மனைவி கர்ப்பம்.. வாழ்த்து தெரிவித்த சமந்தா, ராஷ்மிகா மந்தனா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அட்லி படத்தில் நடித்து வரும் நடிகரின் மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ள நிலையில் அவருக்கு சமந்தா, ராஷ்மிகா மந்தனா உட்பட பல திரை உலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தளபதி விஜய் நடித்த ’தெறி’ படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து வருபவர் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான். இந்த படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்தது. இந்த படத்தை அட்லி அவரது மனைவி பிரியாவுடன் இணைந்து தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த படத்தில் நாயகனாக நடித்து வருண் தவான் தனது சமூக வலைத்தளத்தில் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு சமந்தா, பிரியங்கா சோப்ரா, இலியானா, ராஷ்மிகா மந்தனா, பிரியா அட்லி, பிபாஷா பாசு, ஜான்வி கபூர் உள்பட பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
நடிகர் வருண் தவான் கடந்த 2021 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான நடாஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் திருமணத்திற்கு பின் மூன்று ஆண்டுகள் கழித்து தற்போது அவரது மனைவி கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments