மனைவி ப்ரியா, நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் ஜாலி கொண்டாட்டத்தில் அட்லி.. அப்படி என்ன விசேஷம்?

  • IndiaGlitz, [Thursday,April 25 2024]

பிரபல இயக்குனர் அட்லி தனது மனைவி ப்ரியா மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் உட்பட சிலருடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அட்லி, சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான ’ஜவான்’ படத்தை இயக்கினார் என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் அட்லியின் அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான ’தெறி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் கடந்த சில மாதங்களாக உருவாகி வருகிறது என்பதும் அட்லி மற்றும் அவரது மனைவி ப்ரியா தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முடிவடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

’பேபி ஜான்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து அட்லி மற்றும் படக்குழுவினர் கொண்டாடிய நிலையில் கேக் வெட்டி ஒருவரை ஒருவர் கட்டி பிடித்துக் கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காட்சிகளின் வீடியோ வைரலாகி வருகிறது.

அட்லி, ப்ரியா அட்லீ, கீர்த்தி சுரேஷ், வருண் தவான் உள்பட பலர் இந்த வீடியோவில் உள்ள நிலையில் நேற்று படப்பிடிப்பு முடிவடைந்த நிகழ்வு மட்டுமின்றி வருண் தவான் பிறந்தநாள் என்பதால் நான் படக்குழுவினர் அனைவரும் இரட்டை சந்தோஷத்தை கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிறந்த நாளில் செம்ம கிளாமர்.. பிக்பாஸ் ரச்சிதா மகாலட்சுமியின் 'பயர்' வீடியோ..!

சீரியல் நடிகை மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் ரச்சிதா மகாலட்சுமி நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவரது செம்ம கிளாமர் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ரசிகருக்கு ஏற்பட்ட பரிதாப முடிவு.. குடும்பத்தினருக்கு ஜெயம் ரவி கொடுத்த உத்தரவாதம்..!

ஜெயம் ரவி ரசிகர் ஒருவர் சமீபத்தில் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்தினருக்கு ஜெயம் ரவி கொடுத்த உத்தரவாதம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இதுதான் உண்மையான சக்சஸ் மீட்.. 'கில்லி' விஜய்க்கு மாலை மரியாதை செய்த பிரபலங்கள்..!

கோலிவுட் திரையுலகில் ஒரே ஒரு நாள் ஓடிய படங்களுக்கு கூட போலியான சக்சஸ் மீட் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் சமீபத்தில் 20 ஆண்டுகள் கழித்து ரிலீசான 'கில்லி' படத்திற்கு சக்சஸ் மீட் நடந்துள்ளதாக

சுதா கொங்கராவின் அடுத்த படத்தில் இளம் நடிகர் ஹீரோவா? அப்ப சூர்யாவின் 'புறநானூறு' என்ன ஆச்சு?

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் 'புறநானூறு' என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பின்னர் இந்த படம் சில காரணங்களால் தள்ளி போகும்

எங்க பார்த்தாலும் வடக்கங்க வேலைக்கு வந்துட்டாயிங்க... லிங்குசாமியின் 'வடக்கன்' டீசர்..!

இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள 'வடக்கன்' என்ற திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.