மீண்டும் 'தெறி' படத்தில் இணைந்த அட்லி.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Sunday,July 02 2023]

தளபதி விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்கிய நிலையில் இந்த படம் மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மீண்டும் ‘தெறி’ படத்தில் அட்லி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் சூப்பர் ஹிட்டான ‘தெறி’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டிருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘தெறி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் விஜய் கேரக்டரில் வருண் தவான் நடிக்க இருப்பதாக தெரிகிறது. மேலும் இந்த படத்தை காலிஸ் என்பவர் இயக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே ’கீ’ என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அடுத்த ஆண்டு மே 31ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

‘தெறி’ படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தை இயக்குனர் அட்லி தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் சூப்பர் ஹிட் ஆன ‘தெறி’ படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஒருவழியா 'ஜெயிலர்' அப்டேட் கொடுத்த சன் பிக்சர்ஸ்.. அனிருத் வீடியோ வைரல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

செந்தில்-ஸ்ரீஜா வீட்டில் இன்று என்ன விசேஷம்? க்யூட் புகைப்படம்..

தொலைக்காட்சி சீரியல் நட்சத்திர ஜோடி செந்தில்-ஸ்ரீஜா ஜோடிக்கு திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் பெற்றோர் ஆன நிலையில் தற்போது

ஜூலை 7ஆம் தேதி ராயர் பரம்பரை திரைப்படம்:  பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

சின்னச்சாமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் சின்னசாமி மௌனகுரு தயாரிப்பில், இயக்குநர் ராம்நாத் T இயக்கத்தில் கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா நடிப்பில் காமெடி கலந்த

கடைசி படத்தை வெற்றிப்படமாக கொடுத்த மாரி செல்வராஜ்.. உதயநிதி கொடுத்த கிப்ட் என்ன தெரியுமா?

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் மற்றும் வடிவேலு நடித்த 'மாமன்னன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதை பார்த்து

அவரை என் தாயாக பெற்றதில் நான் பெருமை அடைகிறேன்: கமல், ரஜினி நாயகியின் மகள் நெகிழ்ச்சி..!

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர்களுடன் நடித்த நடிகையின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவரது மகள் தனது இன்ஸ்டாகிராம்