அட்லிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்த பாலிவுட் பிரபலம்!

  • IndiaGlitz, [Wednesday,October 30 2019]

தளபதி விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகிய பிகில் திரைப்படம் கடந்த 25ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.

இந்த படத்திற்கு தளபதி ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவு கொடுத்த நிலையிலும் ஒரு சில ஊடகங்கள் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களை அளித்து வந்தனர். இருப்பினும் கோலிவுட் பிரபலங்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குனருமான கரண் ஜோஹர் அவர்கள் பிகில் படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டி உள்ளார். பிகில் திரைப்படம் விடுமுறையை கொண்டாடும் ஒரு அற்புதமான திரைப்படம். ரோலர் கோஸ்டர் போல் எமோஷன் காட்சிகளும், ஈடு இணை இல்லாத ஆக்சன் காட்சிகள் அடங்கிய இந்தப் படத்தில் தளபதி விஜய்யின் நடிப்பு மிக அபாரமாக இருந்தது. விஜய் ஒரு புத்திசாலி நடிகர் என்பதை இந்த படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார்.

அதேபோல் இயக்குனர் அட்லி தனது திறமையை நிரூபித்தது மட்டுமில்லாமல் அவர்தான் இந்த ஸ்போர்ட்ஸ் திரைப்படத்தின் மாஸ்டராக உள்ளார். அட்லீ ஒரு சூப்பர் ஸ்டார் டைரக்டர் என்று வாழ்த்துகிறேன் என்று கரண்ஜோஹர் கூறியுள்ளார்

கரண் ஜோஹரின் இந்த வாழ்த்துக்கு பிகில் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.